சிதம்பரம்:
கொடுவா மீன் உள்ளிட்ட மீன் வகை உணவுகள் நீரிழிவு மற்றும் மாரடைப்பு நோயை கட்டுப்படுத்துகிறது என பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் முனைவர் டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியை பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் பேசியது:
இந்தியாவில் கொழுப்பு சத்துள்ள உணவை அதிகம் உண்பதால் நீரிழிவு மற்றும் மாரடைப்பு நோய் அதிகம் பேருக்கு உள்ளது. புரதச் சத்துள்ள கொடுவா மீன் உள்ளிட்ட மீன் வகைகள் அந்நோய்களைத் தடுக்கும் சக்தி கொண்டவை. அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மைய மாணவர் திருநாவுக்கரசு முதன்முதலாக கொடுவா மீன் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது என டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய திட்ட இயக்குநர் ஓய்.சி.தம்பி சாம்ராஜ் தலைமை வகித்துப் பேசினார்.
ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய திட்ட இயக்குநர் ஓய்.சி.தம்பி பேசியது:
வெளிநாட்டு ஏற்றுமதியை பெருக்கும் நோக்கில் இந்த நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் தொடங்கப்பட்டது. கொடுவா மீன்களை உப்புநீரில் மட்டுமல்ல நல்ல நீரிலும் வளர்த்து அதிக லாபம் பெறலாம் என தம்பிசாம்ராஜ் தெரிவித்தார். கேர் இந்தியா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மோசஸ் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினார்.
கேர் இந்தியா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மோசஸ் சாமுவேல் பேசியது:
கேர் இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் 684 கிராமங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 394 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. மேலும் கிள்ளை பகுதியில் உள்ள ரூ.34 லட்சம் செலவில் 7 சயஉதவிக் குழுக்களுக்கு களிநண்டு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று கிள்ளை பகுதியில் உப்பனாற்றை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள இருளர் சமூகத்தினருக்கு 5 சுயஉதவிக் குழுக்கள் மூலமும், பரங்கிப்பேட்டையில் 4 சுயஉதவிக் குழுக்கள் மூலம் மீன் உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என மோசஸ் சாமுவேல் தெரிவித்தார். கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குநர் சி.ஜே.சம்பத்குமார் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின அறிவியல் புல பேராசிரியர் எஸ்.அஜ்மல்கான், கடலூர் பொயட்ஸ் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உதவி இயக்குநர் (நீர்வாழ் உயிரின வளர்ப்பு) முனைவர் எஸ்.கந்தன் நன்றி கூறினார். மீன் வளர்ப்பவர்களுக்கு கொடுவா மீன் வளர்ப்பது குறித்த பயிற்சியை திட்ட மேலாளர் எஸ்.பாண்டியராஜன், உதவித் திட்ட மேலாளர் கே.கணேஷ் உள்ளிட்டோர் சின்னத்திரை மூலம் அளித்தனர்.உதவி இயக்குநர் (பொறியியல்) பி.பாசக் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக