உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் யாருக்கும் பயனின்றி முடங்கிப்போன நிலங்கள்


கடலூர்:​ 
 
                     கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.​ இதனால் விவசாயிகளிடம் ​ இருந்து கட்டாயமாக சொற்ப விலையில் கையகப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் யாருக்கும் பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன.​ ​ இதனால் அரசுக்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணமும் வரவில்லை.​ வேறு நபர்களும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.​ முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும்,​​ 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப் படுத்தப்பட்டு,​​ தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.​ நில வளமும்,​​ நீர் வளமும் கொண்ட இப்பகுதி,​​ பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால்,​​ பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன.சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி,​​ மணிலா,​​ சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு இருந்தன.​ இந்த நிலங்களுக்காக ​ விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம்.​ விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரூ.80 ஆயிரம் வரை பெற்றனர்.எந்த நோக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலை தற்போது உருவாகி உள்ளது.​ இந்த நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு முதலில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என வழங்கப்பட்டது.​ அது படிப்படியாக உயர்ந்து,​​ தற்போது ஏக்கர் ரூ.20 லட்சம் என குத்தகைக்கு வழங்கப்படுகிறது. 
 
                       சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது ரூ.200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் 4 தொழிற்சாலைகள் உள்பட,​​ 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.​ 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.​ ​ரூ.200 கோடி மூலதனத்தில்,​​ 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே.​ ஃபார்மா,​​ 60 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் தொழிற்சாலையை அரசு ஏலம் விட்டாலன்றி,​​ யாரும் அதை வாங்க முடியாது.​ அவ்வாறு ஏலம் விடுவதற்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகள் ஆகிறதாம்.​ ஏலத்தில் எடுத்த பிறகும்,​​ பல்வேறு துறைகளில் உள்ள நிலுவைத் தொகைகளைச் செலுத்தி மீண்டும் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாகக் கூறப்படுகிறது.இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக,​​ தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 320 ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைகள் மூடப்பட்டதால்,​​ எந்த பயனுமின்றிக் முடங்கிக் கிடக்கின்றன.​ இந்த நிலங்களால் அவற்றை விற்பனை செய்த விவசாயிகளுக்கும் பயனில்லை.​ வாங்கிய தொழிற்சாலைகளுக்கு,​​ அரசுக்கும் பயனில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.​ நிதி நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் மக்கள் பணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.​ ​
 
இது குறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர்குமார் கூறியது:​ 
 
                    மூடிக்கிடக்கும் ஆலைகளின் நிலங்களை வேறு நபர்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிக்கலான நடைமுறைகள் உள்ளன.​ அரசோ,​​ வங்கிகளோ ஏலம் விட்டால் மட்டுமே மற்றவர்கள் அந்த தொழிற்சாலையை வாங்க முடியும்.​ பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நிலங்களுக்கு,​​ மீண்டும் இப்போதைய சந்தை மதிப்பில்,​​ வித்தியாசத் தொகையை வழங்க வேண்டியது இருக்கிறது.​ ஏலம் விடும் ஆலைகளைப் பல நேரங்களில் இடைத்தரகர்கள் வாங்குகிறார்கள்.​ மூடிக்கிடக்கும் ஆலையை வாங்க வேண்டுமானால் பல வகைளில் பணம் செலவிட்டாக வேண்டியது இருக்கிறது.​ மூடப்பட்ட ஆலைகளின் நிர்வாகமே வேறு நபருக்கு நேரடியாக விற்கவும்,​​ வாங்கும் நபர் அதற்கான நிலுவைத் தொகை அனைத்தையும் ஏற்கும் வகையிலும் விதிகள் இருந்தால்,​​ இங்கு மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளே இருக்காது என்றார் இந்தர்குமார்.
 
இது குறித்து சிப்காட் நிர்வாக அலுவலர் செல்வம் கூறியது:​ 
 
                        மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை,​​ மற்றவர்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளன.​ ஆனால்,​​ அவைகள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகள்,​​ கடன்கள் கோடிக்கணக்கில் உள்ளன.​ நிலத்துக்கான வித்தியாச விலை வழங்கத்தான் வேண்டும்.​ ​ அண்மையில் 3 தொழிற்சாலைகள் ஏலம் மூலம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.​ வங்கிகளும் ஏலம் விடுகின்றன என்றார் செல்வம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior