சிதம்பரம்,:
சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பொன்னந்திட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு ஐசோபாம் எண்ணெய் வித்து திட்ட பயிற்சி அண்மையில் நடைபெற்றது.கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டங்கள்) பாபு பயிற்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். மண் ஆய்வு செய்து உரமிடவும், மண் வளத்தை காத்திடவும் வலியுறுத்துவதுடன் அரசு வழங்கி வரும் பல்வேறு மானிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் மணிலா மற்றும் பிற எண்ணெய் வித்துப் பயிர்களில் சிறந்த மகசூலுக்கான உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மருந்துகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் பல்வேறு மானியத் திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர் விஜயா உரையாற்றினார். மணிலாவில் நுண்ணூட்டக் கரைகல் தெளித்தல் பற்றி உதவி வேளாண் அலுவலர் செல்லதுரை கூறினார். இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக