உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

சிப்காட்டில் கம்பெனிகளை ஆய்வு செய்ய முடிவு ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்


கடலூர்: 

                  கடலூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஊராட்சி குழு முடிவு செய்துள்ளது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரான் சிஸ்மேரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அணைக் கரை  பாலத்தை விரைந்து கட்டவும், காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கந்தசாமி பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பிரபாகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகம் மினி பஸ் நிலையமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்றார். குண்டுஉப்பலவாடி பாலம் கட்ட 11 முறை டெண்டர் விட்டும் பணிகள் நடக்கவில்லை. பாலம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர் ஜெயகாந்தன் பேசினார்.

                   சிதம்பரம் புறவழிச் சாலை பணியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்க்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் மணலூர் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்கள் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்கால் கட்ட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கருப்பன் வலியுறுத்தினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

                 மாவட்டத்தில் கோவில், பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும். சேத்தியாத்தோப்பு 16 கண் மதகு பாலம், வடக்குத்து பாலம், பறவனாற்றுப் பாலங்களை போர்க்கால அடிப்படையில்  துப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் போக்குவரத்து துறையினரை கண்டித்து  மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் குறித்த கவுன்சிலர்களின் புகார்களுக்கு மாசுகாட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்காததால், மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன கம்பெனிகளை ஆய்வு செய்து, அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க அரசிற்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior