பண்ருட்டி:
பண்ருட்டியில் சொத்துவரி, குடிநீர் வரி, வாடகை இனங்கள் செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். பண்ருட்டி நகராட்சிக்கு சொத்துவரி ஒரு கோடி ரூபாயும், குடிநீர் வரி 25 லட்சம் ரூபாய் மற்றும் வாடகை குத்தகை இனங்கள் 25 லட்சம் பாக்கியுள்ளது. இதனையடுத்து நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் தனகோடி தலைமையில் வரிதண்டலர்கள் வெற்றிசெல்வன், தேவநாதன், சேகர், பாபு, கார்த்திகேயன் ஆகியோர் 'ஜப்தி வாகனம்' லாரியுடன் டாம் டாம் அறிவிப்பு செய்து தீவிர வசூல் முகாமில் ஈடுபட்டுள்ளனர். வரி வசூல் முகாமில் நகராட்சிக்கு நீண்டகாலமாக வரிசெலுத்தாத வியாபார நிறுவனங்களுக்கு ஐப்தி நோட்டீஸ் அளித் தும், குடிநீர் இணைப்புக்கு செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டித் தும் நடவடிக்கை எடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக