உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் 'செக்காங்குட்டை ஏரி' குட்டையாக மாறியுள்ளது

திட்டக்குடி:

                   ஆக்கிரமிப்பு காரணமாக திட்டக்குடி கூத்தப் பன்குடிகாடு செக்காங் குட்டை ஏரி, தற்போது குட்டையாக மாறியுள்ளது. இதே நிலை நீடித்தால் ஏரியை வருவாய் துறை பதிவேட்டில் மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. திட்டக்குடி கூத்தப் பன்குடிகாடு சாவடி தெருவில் உள்ள செக் காங்குட்டை ஏரிக்கு மழை நீர் மற்றும்  பாளையம் வழியாக வரும் வெள்ளாற்று நீர் மூலம் தண்ணீர் வசதி கிடைத் தது. இங்கிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் மூலம் பெரியார் நகர் ககிலன் குட்டைக்கும், அங்கிருந்து வீமனேரிக்கும்  செல்லும். இந்த ஏரி மூலம் அப்பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில் சில ஆண்டுகளாக செக்காங்குட்டையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் ஏரியில் கழிப்பிடம் கட்டியும், வைக் கோல் போர் போட்டும், மூங்கில் வளர்த்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரி தற்போது குட்டையாக காட்சியளிக்கிறது. இதனால் ஏரி வழியாக சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு சென்று வந்த நடைபாதை காணாத நிலையில் உள்ளது. பல ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்திய செக்காங்குட்டை தூர்ந்து நீர்வரத்து இன்றி பயனற்ற நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்ததால், இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்திற்கு உடனடியாக தண்ணீர் எடுக்க ஏரி நீரினை தீயணைப்பு துறையினர் பயன்படுத்தி வந்தனர். இதற்காக ஏரிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படாவிட்டால்  கூத்தப்பன் குடிகாடு செக்காங் குட்டை ஏரியே காணாமல் போகும் நிலை ஏற்படும். மேலும் ஏரியை தூர்வாரி, வாய்க்காலை சீரமைத்தால் கோடைக் காலத்தில் மழை இல் லாத நேரத்தில் விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர்  கிடைக்கும்.  ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மேலும் அலட்சியம் காட்டினால் செக்காங்குட்டை ஏரி வருவாய்த்துறை பதிவேட்டில் மட்டுமே இருக்கும். எனவே வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior