உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் வேளாண் சேவை மையங்கள்

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் 5 வேளாண் சேவை மையங்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் 100 வேளாண் சேவை மையங்களை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பம், பி.முட்லூர், தொழுதூர், பெண்ணாடம் ஆகிய இடங்களில் வேளாண் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிஞ்சிப்பாடி ஆயிக்குப்பத்தில் நடந்த விழாவில், வேளாண் சேவை மையங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை (5 மினி டிராக்டர், 5 பவர் டில்லர்கள், 2 நாற்று நடும் கருவிகள், 14 களை எடுக்கும் கருவிகள், 8 பவர் ஸ்பிரேயர்கள், 7 கைத் தெளிப்பான்கள், 11 தார்ப் பாய்கள்) அமைச்சர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

                கடலூர் மாவட்டத்தில் 106 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், பயிர் காப்பீடு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு கடலூர் மாவட்ட விவசாயிகள் 1,00,908 பேருக்கு ரூ.246.11 கோடி வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2009-10-ம் ஆண்டுக்கு 87,889 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.160.1 கோடியும், விவசாயக் கூட்டுப் பொறுப்புக்குழு கடனாக 500 குழுக்களுக்கு ரூ.5.81 கோடியும் மத்திய காலக் கடனாக 764 பேருக்கு ரூ.3.16 கோடியும், மகளிர் சுயஉதவிக்குழு கடனாக 2,468 குழுக்களுக்கு ரூ.15.69 கோடியும் பிற்பட்டோருக்கான கடன் 352 பேருக்கு ரூ.40.91 லட்சமும், சிறுபான்மையினருக்கான கடன் 650 பேருக்கு ரூ.162.5 லட்சமும் மாற்றுத் திறனாளிகள் 311 பேருக்கு ரூ.54.91 லட்சமும் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது என்றார் அமைச்சர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட  வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior