சிதம்பரம் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலவிடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி சிதம்பரத்தில் துவங்கியது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சி.முட் லூர் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 100 பேர் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சிதம்பரம் ஆக்ஸ்போர்டு இன்ஸ்டியூட் நிறுவனர் ஆறுமுகம் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் துளசிராமன் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சேரமான் பேசினர். இன்ஸ்டியூட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.