உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

உர மானிய கொள்கை மாற்றத்தால் போலி உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும்: விவசாயிகள் கவலை

கடலூர் : 

                   கடந்த 10 ஆண்டுகளாக இருந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் புதிய உர மானிய கொள்கையாக மாற்றம் அடைவதால் ஏற்படும் விலையேற்றம் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம் இனி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்து என உரங்களில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. யூரியா உரத்தை மட்டும் நாளை முதல் அதிகபட்ச சில்லறை அரசு விலை நிர்ணயம் செய்து 10 சதவீதம் உயர்த்துகிறது. அதன்படி இதுவரை 4,830 ரூபாயாக இருந்த ஒரு மெட்ரிக் டன் யூரியா நாளை 1ம் தேதி முதல் 5,310 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. யூரியாவை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிற உரங்களுக்கு அந்தந்த கம்பெனிகளே விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு வழி வகுத்துள்ளதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கூறுகையில் '

                  விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான உர கொள்கை முடிவு. அனைத்து உரங்களையும் அந்தந்த வகையான ரசாயன கலப்பினங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உரங்கள் அரசு கட்டுப் பாட்டில் இருக்கும்போதே தவறுகள் நடந்துள்ளது. உரங்கள் அனைத்தும் என்.பி.கே., எனப்படும் கலைவை சதவீதத்திற்கு மேல் குறைகள் இருந்தது.தற்போது யூரியாவை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மற்ற உரங்களின் விலையை கம்பெனியே நிர்ணயம் செய்து கொள்வது என்பது தவறான கொள்கை முடிவு. இதனால் சந்தையில் போலியாக தயாரிக்கப்பட்ட உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும். தரமான ஒரிஜினல் உரங்கள் கிடைக்குமா என சந்தேகம் எழுந் துள்ளது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior