பண்ருட்டி:
பண்ருட்டி காவல் சரகத்தில் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய பகுதிகளை, கோவையைச் சேர்ந்த மத்திய அதிரடிப் படையினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். கோவையைச் சேர்ந்த 105-வது பட்டாலியன் பி கம்பெனியைச் சேர்ந்த உதவி ஆணையர் என்.சுனில்குமார், இன்ஸ்பெக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அதிரடிப் படையினர் 60 பேர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு கடந்த 25-ம் தேதி முதல் மாவட்டத்தின் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். திங்கள்கிழமை பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதியில் பிரச்னை மற்றும் பதற்றமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக பண்ருட்டி சரக காவல் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.