உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

பறிபோகும் அவலம்! சேவை இல்ல மாணவிகளின் சுதந்திரம்... சமூக நலத்துறை அலுவலகத்தால் சிக்கல்

கடலூர் : 

                     கடலூர் சேவை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றியதால், அங்கு தங்கி படித்து வரும் 600க்கும் மேற் பட்ட ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிப்பதோடு, அவர்களின் சுதந் திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் அரசு சேவை இல்லம் இயங்கி வருகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், ஆதவற்ற பெண் கள், சமூக சூழலால் பாதித்த பெண் கள், பாலியல் கொடுமைக்களுக்கு உட்பட்ட பெண்கள் இந்த இல்லத்தில் தங்கி படித்து வருகின்றனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தாய், தந்தையரை இழந்த சிறுவர், சிறுமிகள் 40 பேரும், கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வந்த அன்னை சத்யா ஆதரவற்றை மாணவிகளும் கடந்த நான்காண்டாக சேவை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

                  மற்றோர் பகுதியில் உள்ள கட்டடத்தில் வளர் இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டு வந்தது. சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இந்த சேவை இல்லத்தில் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாத அள விற்கு பாதுகாப்பு இருந்தது. இதனால் அங்குள்ள மாணவிகள் சுதந்திரமாக இருந்தனர். இந்நிலையில் சேவை இல்ல வளாகத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் கடலூர் புதுப்பாளையத்தில் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தை மாற்றியுள்ளனர். இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பம் கொடுக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக தினசரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார் மீதான விசாரணைக்கு வரும் இரு தரப்பினரும் சேவை இல்ல வளாகத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், அங்கு படித்து வரும் மாணவிகளின் படிப்பு முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கும்பல், கும்பலாக வந்து செல்வதால் மாணவிகள் மட்டுமே தங்கியுள்ள சேவை இல்லத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

                   மேலும், பள்ளி முடிந்து மாணவி கள் இல்ல வளாகத்தில் சுதந்திரமாக விளையாடுவது வழக்கம். ஆனால் தற்போது மாலை 6 மணிக்கு மேலும் சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் இருப்பதாலும், அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதாலும் மாணவிகள் விளையாடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் துணி துவைப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளும் பாதிக்கிறது. சேவை இல்லத்தில் ஆதரவற்ற மாணவிகளின் கல்வியை மேம் படுத்தவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், மாணவி கள் சுதந்திரமாக செயல்பட இல்ல வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை உடனடியாக வேறு இடத் திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior