உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

போலி மருந்து வழக்கில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

கடலூர் : 

                        போலி இருமல் மருந்து விற்பனை செய்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவர் அதே பகுதியில் செல்வவிநாயகர் ஏஜென்சி என்ற பெயரில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

                    அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' 2700 பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இது குறித்து கடலூர் மாத்திரை சோதனை ஆய்வாளர் குருபாரதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஏஜென்சியை நடத்தி வந்த வள்ளியப்பனை தேடி வந்தனர். அதனை அறிந்த வள்ளியப்பன் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (3)ல் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப் பட்டார். போலி மருந்து குறித்து வள்ளியப்பனிடம் விசாரணை செய்ய அனுமதி கோரி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சுந்தரம், வள்ளியப்பனை வரும் 5ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior