உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்தாளுநர்கள் கட்டாயம் தேவை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெய்வேலி:

             மருந்து கடைகளில் பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலி இந்திரா நகரில் திங்கள்கிழமை நடந்த அப்பல்லோ மருத்துவமனையின் தகவல் மையத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், அங்கு கூறியது: 

                    காலாவதியான மருந்து மற்றும் போலி மருந்து தொடர்பாக எனக்கு ஓரிரு மாதத்துக்கு  முன்பே தகவல் கிட்டியதும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது பலர் இதில் சிக்கியுள்ளனர். பல மருந்து விற்பனைக் கடைகளில் மருந்தாளுநர்களே இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே மருந்து விற்பனைக் கடைகளிலும் சோதனை செய்து, பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் இல்லாத மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசு மருத்துவமனைகளில் முறையாக டெண்டர் கோரப்பட்டு தரமுள்ள மருந்துகளாக என்பதை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர்தான் மருந்துகள் வாங்கப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான அல்லது போலி மருந்துகளோ இருக்க வாய்ப்பில்லை. நெய்வேலியில் என்எல்சி மருத்துவமனையில் விரைவில் சோதனை செய்யப்படும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior