கடலூர் :
டாஸ்மாக் பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி வரும் 15ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் கூறினார்.
அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
டாஸ்மாக் பணியாளர் கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் அரசு பணியாளர் கள் சங்கம் வரும் 15ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக 'டாஸ்மாக்' நிர்வாகம் 100 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. 50 பேருக்கு மேல் குற்ற குறிப் பாணை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாக அலுவலர்கள் பணியாளர்களை அடிமை போல் நடத்தி வருகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற நிலை இல்லை. வரும் 25ம் தேதி 'டாஸ் மாக்' சங்க சிறப்பு மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடையில் பணியாற்றும் ஊழியர்களைப் போல் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் சத்துணவு, அங்கன் வாடி, ஊராட்சி உதவியாளர்களுக்கும் நிரந்தரம் மற்றும் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் வரும் மே மாதம் 7ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இவ்வாறு பாலசுப்ரமணியம் கூறினார்.
downlaod this page as pdf