நெல்லிக்குப்பம் :
திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் பாலம் கட்டப்படுமா? என எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்று தரைப்பாலம் ஆண்டு தோறும் மழையால் பாதிக் கப்படுகிறது. இதனால் 50 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கி. மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தற்காலிகமாக பாலத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீண் செலவாகிறது. அங்கு மேம்பாலம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என கடந்த வாரம் 'அமைச் சர் சொன் னது காற்றோடு போச்சு' என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில் பேசுகையில்
'திருமானிக்குழி தரைப் பாலம் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இரண்டு ஆண்டில் தற்காலிகமாக சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு நெடுஞ்சாலை த்துறை அமைச்சர் பார்வையிட்டு மேம்பாலம் கட்டித் தரப்படும் என கூறினார். 50 கிராம மக்கள் நலன் கருதி மேம்பாலம் கட்ட வேண்டும்' என பேசினார். இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசுகையில் 'நான் அப்பகுதியை நேரில் பார்வையிட்டேன். எம்.எல்.ஏ., கோரிக்கை நியாயமானது. நபார்டு வங்கியில் கடன் பெற்று மாநில அரசின் பங்களிப்பையும் செலுத்தி இதுபோன்ற பாலங்கள் உயர் மட்ட பாலங்களாக கட்டப் படுகிறது. திருமானிக்குழி பாலம் நபார்டு வங்கியில் கடன் பெறும் பட்டியலில் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
downlaod this page as pdf