பண்ருட்டி :
தி.மு.க., அரசின் மீது குறைகளை கூற முடியாமல் எதிர்க்கட்சிகள் எதை எதையோ பேசி வருகின்றன என எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசினார்.
காடாம்புலியூரில் தி.மு.க., அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஆடலரசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழ் பேரின்பன், நகராட்சி சேர்மன் பச்சையப்பன், மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், ஒன்றிய துணை செயலாளர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஞானமணி, அன்பழகன், முன்னாள் பண்ருட்டி நகர செயலாளர் கதிரவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், லட்சுமிநாராயணன், எழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். குறிப்பாக கல்விக்காக 10 ஆயிரம் கோடி, ஆதிதிராவிடர் நலத்திற்காக 3,250 கோடி, உணவு திட்டத்திற்காக 3,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தி.மு.க., அரசின் சாதனைகளை சில நிமிடங்களில் கூறிவிட முடியாது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகள் மாற்றும் திட்டம் என பல திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் அதிகம் பயன் பெறுகின்றனர். முதல்வரும், துணை முதல்வர் ஸ்டாலினும் மக்கள் கஷ்டங்களை நினைவில் வைத்து இத்திட்டங்களை போட்டுள்ளனர். அதனால்தான் தி.மு.க., அரசின் மீது குறைகளை கூற முடியாமல் எதிர்க்கட்சிகள் எதை எதையோ பேசி வருகின்றன.