கடலூர் :
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு பணிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள ராணுவ வீரர்கள் நேற்று கடலூர் வந்தனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நாளை 13ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் சிப்பாய் வர்த்தகம், பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், நர்சிங் ஆகிய பணிகளுக்கு ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கடலூர், விழுப்புரம், திருவண் ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பதினேழரை வயது முதல் 21 வயதிற்குட் பட்டவர்கள் கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகளுடன் நேரில் பங் கேற்கலாம்.
முதல் கட்டமாக உடற் கூறு மற்றும் உடற் தகுதி தேர்வும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ சோதனையில் பங்கேற்க வேண்டும். இந்த இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்விற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் ராணுவ பிரிவைச் சேர்ந்த 17 வீரர்கள் துணை மேஜர் கூத்தனார் தலைமையில் நேற்று மாலை கடலூர் வந்தனர்.இக்குழுவினர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.