கடலூர் :
கடலூரில் இளநீர் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. பொதுவாக கோடை வெயில் ஏப்ரல் 15 தேதிக்கு பிறகுதான் 100 டிகிரியை தாண்டும். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது. இதனால் மக்கள் உஷ்ணத்தை தணிக்க குளிர்பானங்கள், தர்பூசணி, ஜூஸ் கடைகளை நாடி செல்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட மருத்துவ குணம் கொண்ட இளநீரை காலை, மாலை மக்கள் விரும்பி குடிப்பது வழக்கம்.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் இளநீர் 5 ரூபாயாக விற்பனை செய் யப்பட்டு வந்தது. ஆனால் கோடை துவங்கியவுடன் இதன் விலை திடீரென 10 ரூபாயாக உயர்ந் துள்ளது. மரத்தில் 3 மாதங்களில் பறிக்கப்படும் இளநீர் 2.50 முதல் 3 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால் அதே இளநீர் மேலும் 2 மாதங்கள் கழித்து பறிக்கப்படும் தேங்காயும் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இளநீர் வியாபாரிகள் மரம் ஏறும் ஆட்களுடன் சென்று இளநீரை 2.50 முதல் 3 ரூபாய் வரை விலை பேசி பறித்து அதில் 3 அல்லது 4 மடங்கு லாபம் வைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தேங்காய் பறிப்பதற்கு மரம் ஏறும் ஆட்கள் விவசாயியை தேடி வருவதில்லை. ஆனால் கோடையில் இளநீர் தேவையை கருத் தில் கொண்டு விவசாயிகளை அணுகி கேட்பதால், வேலை மிச்சம் எனக் கருதி விவசாயிகளும் குறைந்த விலைக்கே கொடுத்து விடுகின்றனர். விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் இளநீர் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால், இளநீரை சென்னைக்கு லாரிகளில் அனுப்புகின்றனர்.