உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

திட்டக்குடியில் ரேஷன் அரிசி பதுக்கல் : வருவாய்த் துறையினர் விசாரணை


திட்டக்குடி : 

                         ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து ஆர்.டி.ஓ., தலைமையிலான வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.
                           திட்டக்குடி தாலுகா பகுதிகளில் ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் தாசில் தார்கள் ஜெயராமன், கண்ணன், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., பிச்சைப் பிள்ளை, உதவியாளர் தயாளன் ஆகியோர் நேற்று  முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் புதுக்குடியான் சந்தில் வசிக்கும் லோடுமேன் அருணாச்சலம் என் பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பதுக்கல் ரேஷன் அரிசி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அரிசி பதுக்கியதற்கான தடயங்கள் இருந்ததால் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவிநியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கிறது. கடந்த மாதம் கொரக்கவாடி பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த அரிசி மூட்டைகள் கைப்பற்றப் பட்டது. மாவட்டம் முழுவதும் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதும் அதிகாரிகள் கைப்பற்றுவதும் ஆனால் ஒருவரும் கைது செய்யப்படாததுதான் கேள்விக்குறியாக உள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior