உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

கடலூர் ஜவான்பவன் - செம்மண்டலம் புறவழிச்சாலை யாருக்கு சொந்தம்! நிதி பெற்றுத்தர மக்கள் பிரதிநிதிகள் முன்வருவார்களா?

 கடலூர் : 

              கடலூர் ஜவான்பவன் அருகே அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை யாரும் சொந்தம் கொண் டாட முன் வராததால் மக் கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
             கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால்  பொது மக்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். நேதாஜி, பாரதி சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதாலும் மாற்று வழியில்லாமல் ஒரே சாலையில் அனைவரும் பயணிப்பதால் நெரிசல் அதிகமாகிறது. எனவே புறவழிச்சாலை அமைத்து நெரிசலை குறைக்க  திட்டமிடப்பட் டது. இதனை கருத்தில் கொண்டு இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ககன் தீப் சிங் பேடி காலத்தில் ஜவான் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச்சாலை அமைக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
           புறவழிச் சாலைக்கு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கெடிலம் நதிக்கரையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் சுப்புராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன்குளம் வெள்ள நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் அருகில் இருந்து செம்மண்டலம் வரையிலான 1.8 கி.மீ., நீளத்தில் அகலமான சாலை அமைக்கப் பட்டுள் ளது. இந்த சாலையில் கெடிலம் ஆற்றங்கரையாக இருப்பதால் வெள்ளத் தின்போது பழுதாகாமல் இருக்க பொதுப்பணித்துறை சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
              பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் தத்தம் பணிகளை முடித்துவிட்டு அப்படியே ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் தார் சாலை பணிகள்  நடைபெறாததால், பல கோடி ரூபாய் செலவு செய்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் கிடக்கிறது.  இந்த புறவழிச்சாலை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் நடனசபாபதியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நாங்கள் முடித்து விட்டோம். தார் சாலை போட எங்களிடம் நிதி இல்லை. அரசிடம் இப்பணிக்காக 90 லட்ச ரூபாய் கேட்டுள்ளோம். நிதி ஒதுக் கீடு கிடைத்தால் தார் சாலை போடுவோம். இல்லையென்றால் நகராட்சிதான் முயற்சி மேற் கொள்ள வேண்டும்' என முடித்துக் கொண்டார்.
                 பொதுப் பணித்துறை அதிகாரிகளும் 'எங்களுக்கு கொடுக்கப்பட்ட தடுப்பு சுவர் பணியை முடித்து விட் டோம். சாலை போடும் பணிக்கும் எங்களுக்கும் தொடர் பில்லை' என்கின்றனர். ஏற்கனவே, பாதாள சாக் கடைத் திட்டம், நகர சாலைகள் போடும் பணிக் காக 2 கோடி ரூபாய் தேவை என அரசிடம் நிதி கேட்டு காத்திருக்கிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நகராட்சி புறவழிச்சாலைக் காக மேலும் ஒரு கோடி ரூபாயை தற்போது செலவிடுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைத்து தார் சாலை போடாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர முன் வந்து கடலூர் மக்கள் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பார்களா?

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior