கடலூர் :
காலாவதியான மருத்து பிரச்னைக்கு தீர்வுகான அனைத்து கடைகளிலும் பயிற்சி பெற்ற மருந்தாளுனர்கள் முழுநேரமும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. மாநிலத் தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி, மாவட்ட செயலா ளர் இளங்கோ முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி சத்தியராஜ் வரவேற்றார். பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பொருளாளர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை படித்தார். கூட்டத்தில் காலாவதி மருத்து பிரச்னைக்கு தீர்வுகாண அனைத்து கடைகளிலும் பயிற்சி பெற்ற மருந்தாளுனர்கள் முழு நேரமும் பணி யில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.