பண்ருட்டி:
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முக்காடு அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அண்ணாகிராம ஒன்றியம் சார்பில் சத்துணவு ஊழியர் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில துணை லைவர் ராமநாதன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கடலூர்:
கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட் டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர்கள் யசோதை, வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் மோகனசுந்தரம், கிருஷ்ணவேணி, ராஜ்மோகன், மாவட்ட தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், மல்லிகா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். விருத்தாசலம்: பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், சின்னசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன் றிய தலைவர் கணபதி, ராமச்சந்திரன், செல்வராஜ், கோவிந் தராஜ், பெரியசாமி, நாட்டு துரை, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf