கடலூர்:
கடலூரில் டாஸ்மாக் கடை அருகே, சாக்கடையில் கார் டிரைவர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸôர் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸôருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸôர் விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலில் காயங்கள் இருந்தன. சடலத்தின் அருகே காருக்கு அடிக்கும் புதிய பெயின்ட் டப்பாக்கள் இருந்தன. அவற்றை போலீஸôர் கைப்பற்றினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் சிதம்பரத்தை அடுத்த பழைஞ்சநல்லூரைச் சேர்ந்த கார் டிரைவர் ஸ்டாலின் (35) என்று தெரியவந்தது. ஸ்டாலின் புதுவை சென்று, காருக்கு அடிக்கும் பெயின்ட் வாங்கிக்கொண்டு சிதம்பரத்துக்குத் திரும்பும் வழியில் கடலூரில் இறங்கி இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. அவர் ஏன் கடலூரில் இறங்கினார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. குடிபோதையில் இருந்த அவர், சாக்கடை அருகே சிறுநீர் கழிக்கச் சென்றபோது சாக்கடையில் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டாரா என்று தெரியவில்லை. ஸ்டாலின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து போலீஸôர் விசாரித்து வருகிறார்கள்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக