சிறுபாக்கம்:
மங்களூர் ஒன்றியம் அடரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மங்களூர் ஒன்றிய துணை சேர்மன் சின்னசாமி, அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் நேரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் - கடலூர் நெடுஞ்சாலையில் அடரி ஊராட்சி அமைந்துள்ளது. இதனைச்சுற்றி பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், களத்தூர், காஞ்சிராங்குளம், விநாயகநந்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அதிகளவு ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டால் 50 கிலோ மீட்டர் தூரமுள்ள விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதனால் நேர விரயமும், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே மங்களூர் ஒன்றியம் அடரியில் கிராம மக்களின் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக