விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசினர். கடலூர் நாடாளுமன்ற அமைப்பாளர் செந்தில்முருகன் வரவேற்றார், கடலூர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட பொதுச் செயலர் காமராஜ், சங்கர், இனாயத், சீனுவாசன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக