திட்டக்குடி:
கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.
திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட பின் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் வெளி மாநில வாகனங்கள், பதிவெண் இல்லாத வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிரிமினல் குற்றங்கள் அதிகளவு குறைக்கப்படும். சிறைகளுக்குள் மொபைல் போன் மூலம் தகவல் தொடர்புகள் பெருகியுள்ளது. இதனால் பழைய குற்றவாளிகளின் நட்பும் கிடைக்கிறது. கடலூர் சிறையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. கடலூர் மாவட்டத்திலுள்ள 46 போலீஸ் ஸ்டேஷன்களில் 7 உயர்தரமாகவும், 14 நடுத்தரமாகவும், மீதமுள்ள 25 போலீஸ் ஸ்டேஷன்களில் லைட்டாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளது. பணியிட மாறுதல் விரும்புவோர் மனுக்கள் பரிசீலித்து அடுத்த கட்டமாக தீர்வு காணப்படும். விருத்தாசலம், மங்களம்பேட்டை பகுதிகளில் அதிகாரிகள் இல்லை. திட்டக்குடி பகுதியில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். குற்ற நடவடிக்கைகளை குறைக்க போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும் என்றார். டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடனிருந்தனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக