உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

அனாதையாக கிடந்த பெண் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

 கடலூர்: 

                 குள்ளஞ்சாவடியில் கண் டெடுக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடியை சேர்ந்த இஸ்மாயில் வீட்டுத் தோட்டத்தில் கடந்த 1ம் தேதி பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுபற்றிய விவரத்தை 'சைல்டு லைன்'அமைப் பிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில 'சைல்டு லைன்' அமைப் பினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிட்டு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இந்திய குழந்தைகள் நலச் சங்க மாவட்ட செயலாளர் அருளப்பன், பொருளாளர் சுஜாதா சீனிவாசன், குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் குழந்தையை விழுப்புரத்தில் உள்ள கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது 'சைல்டு லைன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உடனிருந்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior