விழுப்புரம், திருவாரூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் சூழ்நிலை உருவாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். அரசு பொது மருத்துவமனையில் 9 வயது பெண் குழந்தைக்கு காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை கூறியது:
""விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டு கட்ட ஆய்வுகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் செய்து முடித்து விட்டனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை, இரண்டாம் கட்ட ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திங்கள்கிழமை (மே 3) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய திருவாரூர் வர உள்ளனர்.கூடுதலாக 170 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட இப்போதுள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கும்; அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 170 இடங்கள் உருவாகும். மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653-ஆக அதிகரிக்கும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக