சிதம்பரம்:
முட்டம் பாலம் இணைப்பு சாலை அகலப்படுத்தும் பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய சர்வே பணி டி.ஆர். ஓ., நடராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல் மேடு இடையே நபார்டு உதவியுடன் 48.85 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மண் பரிசோதனை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பாலம் கட்ட பூமி பூஜை மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டது. அதையடுத்து காட்டுமன்னார்கோவிலில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நடந்த விழாவில் முட்டம் பாலத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் பணி 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டதையடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பில்லர் அமைப்பதற்காக பைல் போடும் பணி நடக்கிறது. இந்நிலையில் பாலத்தையொட்டி முட்டம் கிராமத்தில் இணைப்பு சாலை அகலப்படுத்த கையகப்படுத்தப்பட்ட இடத்தை டி.ஆர்.ஒ., நடராஜன் முன்னிலையில் நேற்று சர்வே பணி நடந்தது. ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் வீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக