உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

அரசு மருத்துவர்கள் 436 பேர் விரைவில் நியமனம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

           
                         தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 436 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

       திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவிலுள்ள முத்தூர், மூலனூர், நத்தக்காடையூர் ஆகிய இடங்களில் தலா ரூ.62 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் பிரிவு, அறுவை அரங்கம், நுண்கதிர் பிரிவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
பின்னர் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
                  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 436 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது காங்கயம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும், கிராமப்புற மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்.தற்போது, திமுக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் காரணமாக ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். 
                        மேலும், தமிழக மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் கிடைத்திட தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என்றார்.தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை இல்லை: 
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுவரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடப் பணிகளைப் பார்வையிட்ட பிறகு அமைச்சர் கூறியதாவது:
                      சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறக்கப்படும். தமிழக மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் உள்ளனர். புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை. மாணவர் சேர்க்கை நிச்சயம் நடைபெறும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior