உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

சொர்ணவாரி பட்டத்திற்கு விதை நெல் தட்டுப்பாடு : அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் அவதி

கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் விதை நெல் கிடைக் காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் மாற்றுப் பயிரை தேட வேண் டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.

                  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி நீரைக் கொண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள நவரை பட்டத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் குறுவையும், பின்னர் ஒட்டு மொத்தமாக சம்பா பருவத்தில் பெருமளவு நெல்லும் பயிர் செய்யப்படுகின்றன. இதில் நவரை, குறுவை, சம்பா பருவம் முழுவதும் காவிரி, மற்றும் ஏரி பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். கோடை காலத்தில் ஏரி தண்ணீர் கிடைக்கவில்லையென்றாலும் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் மின்சார மோட்டரை பயன்படுத்தி சொர்ணவாரி பட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிறந்த விதை நேர்த்தி, மண்ணின் தன்மை பாதுகாத்தல், பூச்சியை கட்டுப் படுத்துதல், அதிக மகசூல், வயது குறைந்த பயிர்களை புகுத்துதல் போன்றவற்றில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

                   தற்போது கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் தாராளமாக கிடைத்து வருவதால் சொர்ணவாரி பட்டத்தில் அதிகளவு நெல் பயிர் செய்யப்படுகிறது. விவசாயிகள் அதிக மகசூல் பெற மூலகாரணமாக இருப்பது விதை தான். அதனால் அரசு வேளாண்துறை மூலம் விதை நேர்த்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. கடந்த 3 வாரமாக நெல் விதை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்ட சொற்ப அளவு நெல் மூட்டைகள் வந்த உடனேயே விற்று தீர்ந்துவிட்டன. அதனால் தாமதமாக பயிர் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. வேளாண் விரிவாக்க மையங்களை அணுகினால் நெல் விதைகள் விற்று தீர்ந்துவிட்டன. தனியார் கடைகளை கைகாட்டி உத்தரவாதத்துடன் வாங்கிச் செல்லுங்கள் என கூறுகின்றனர். ஆனால் தனியார் கடைகளில் ஒரு கிலோ நெல் விதைக்கு 6 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் விளை நிலங்கள் மனைகளாக மாறி வருகின் றன. இருக்கின்ற விளை நிலத்திலும் பயிர் செய்ய 100 நாள் வேலை திட்டத்தினால் யாரும் வேலைக்கு வருவதில்லை.

                       இதனால் மனித உழைப்பு அதிகமாக தேவைப்படும் பயிர்களில் இருந்து மாற்றப்பட்டு கரும்பு, சவுக்கு, எண்ணைப்பனை போன்ற பல்லாண்டு பயிர்களை விவசாயிகள் நாடிச் செல்கின்றனர். எஞ்சியுள்ள இடத்தில் நிலத்தின் உரிமையாளர்களே செய்து வரும் விவசாய நிலங்கள் என பார்க்கப் போனால் மிகவும் குறைவு. அதுபோன்ற குறைவான இடத்தில் இருந்துதான் மக்களுக்கு தேவையான நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும். ஆனால் வேளாண் அதிகாரிகள் மெத்தனப்போக்கினால் விதை கிடைக்காத விவசாயிகள் மானாவாரி பயிருக்கு மாறுவதைத் தவிர வழியில்லை என் கின்றனர். இதனால் நெல் உற்பத்தி குறைய வாய்ப் புள்ளது. இனிமேலாவது அதிகாரிகள் காலத்தோடு விதை நெல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior