உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

சிறப்பு எஸ்.ஐ., பதவிக்கு காத்திருக்கும் ஏட்டுகள்

கடலூர் : 

                   விழுப்புரம் சரகத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த 146 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற டி.ஐ.ஜி.,யின் கையெழுத்திற்காக காத்திருக்கின்றனர்.

                   தமிழக காவல் துறையில் தேர்வு முறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. அதில் பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக பதவி உயர்வுகளில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு இரண்டாம் நிலை காவலர்கள் 10 ஆண்டு பணி முடித்தால் முதல் நிலை காவலராகவும், அடுத்த ஐந்தாண்டு பணி முடித்தால் தலைமைக் காவலராகவும், அந்த பதவியில் "பனிஷ்மென்ட்' ஏதுமின்றி 10 ஆண்டு நிறைவு செய்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 1978ம் ஆண்டு பணியில் சேர்ந்த 180 போலீசார் களுக்கு கடந்த 25-11-99ம் தேதி அன்று தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களில் பணிக்காலத்தில் தண்டனை பெற்ற 34 ஏட்டுகளை தவிர்த்து மற்ற 146 ஏட்டுகளுக்கு அரசின் உத்தரவின்படி கடந்த 25-11-2009ம் தேதி செலக்ஷன் கிரேடு வழங்கப்பட்டு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்க அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் டி.ஐ.ஜி.,க்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர் வுக்கான கோப்பு டி.ஐ.ஜி., யின் கையெழுத்து ஆகாமல் காலம் கடத்தப்பட்டு வருவதால், விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த 146 ஏட்டுகளும் தங்களுக்கு பதவி உயர்வு எப்போது கிடைக் கும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior