உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

நகை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை

நெய்வேலி:

                நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடியில் உள்ள நகைக்கடை, கூட்டுறவு வங்கி மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு நெய்வேலி போலீசார் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைகளை செவ்வாக்கிழமை வழங்கினர்.

               அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் நகைக்கடை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முன்னெச்சரிக்கையாக எவ்வாறு தடுப்பது, அதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் நகைக்கடை, வட்டிக்கடை மற்றும் கூட்டுறவு வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

                அப்போது அனைத்து கடைக்காரர்களும் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். அபாய ஒலி எழுப்பும் சைரன் பொறுத்த வேண்டும். இரவு நேர ரோந்துப்பணிக்கு வரும் போலீசாரிடம் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர் இருந்தால் அவர் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார், வடலூர் எஸ்.ஐ. இளங்கோ உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior