கடலூர் :
வங்கிகளில் விவசாய கடன் பெற போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கானூர் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன், சிலர் போலி ஆவணம் தயாரித்து விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கடந்த நவ. 24ம் தேதி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகன், பிச்சைமணி, தில்லைகோவிந்தன், காசிநாதன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந் தப்பட்டவர்களுக்கு போலியாக பட்டா, சிட்டா, அடங்கல் தயாரித்து கொடுத்த முக்கிய குற்றவாளியான கம்மாபுரம் ரங்கநாதன் (49) சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
இச்சம்பவம் குறித்து கலெக் டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேலு, சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்படை பிரிவு சப் இன்ஸ் பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிக்குழு விசாரணை மேற்கொண்டனர். அதில், கடலூர் மாவட்டத் தில் கருவேப்பிலங்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், சோழதரம், காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, அழகாபுரம் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பலர் போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் செந்தில் (34) என்பவர் தனது 6 ஏக்கர் முந்திரி தோப்பிற்கு 10 ஏக்கர் கரும்பு பயிரிட்டிருப்பதாக போலியாக ஆவணங்கள் தயாரித்து சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க் கரை ஆலையிலும், மற்றொரு போலி ஆவணம் மூலம் ஸ்டேட் பாங்கிலும் விவசாய கடன் வாங்கியிருந்தார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார், நேற்று காலை செந்திலை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தமிழர் விடுதலை படையில் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்ததும், அதன்பிறகு கம்மாபுரம் ரங்கநாதன் (ஏற்கனவே நடந்த போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர்) உதவியுடன் போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று வருவதும், அதேபோன்று வங்கி கடன் பெற முயற்சிப்பவர்களுக்கு சான்றுகள் பெற்றுத் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு அவராகவே சான்றுகள் தயாரித்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கம்மாபுரம் ரங்கநாதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவர் வீட்டிலும் சோதனையிட்டதில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஆண்டிமடம் தலைமையிட துணை தாசில்தார்கள், பல்வேறு வி.ஏ.ஓ.,க்கள், கரும்பு ஆய் வாளர், ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர், ஸ்டேட் பாங்க், இந்தியன் பாங்க் மற்றும் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை சீல்கள், தாலுகா அலுவலகத்தில் பயன் படுத்தப்படும் கோபுர சீல் உள்ளிட்ட 39 போலி சீல்களையும், பல்வேறு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு பழகி பார்த்த பேப்பர் களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அடுத்தவர் நிலத்தை வாங்கி ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாக தயாரிக்கப் பட்ட இரண்டு போலி ஆவணங்கள், வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிப் பதற்காக தயாரித்து வைத்திருந்த 90 போலி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதுபற்றி தகவலறிந்த கலெக்டர் சீத்தாராமன், நேற்று மதியம் மாவட்ட குற்றப் பிரிவிற்கு நேரில் சென்று அங்கு போலீசார் கைப்பற்றிய போலி ரப்பர் ஸ்டாம்புகளை பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:
கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வங்கிகளில் கடன் பெற போலி ஆவணங்கள் தயாரித்திருப்பது கண்டுபிடித்திருப்பதால், குறிப்பிட்ட வங்கிகளில் ஏற்கனவே கடன் கொடுத்த ஆவணங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகளை தவிர்த்திட அரசு அலுவலர்கள் தங்களது ரப்பர் ஸ்டாம் புகளை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ்களில் முத்திரையை தெளிவாக பதிக்க வேண்டும். கூடுமானவரை "மெட்டல் சீல்' பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக வருவாய்த் துறை அதிகாரிகள் தாங்கள் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகளின் மாதிரியை எனது நேர் முக உதவியாளரிடம் (பொது) ஒப்படைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெறப்படும் சான்றுகளில் சந்தேகம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலரின் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரியுடன் ஒப்பிட்டு பார்க்க இந்த மாதிரி பயன்படுத்தப்படும். மாவட்டத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்வோர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அரசு அலுவலகங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் செய்ய ஆர்டர் வந்தால், சம்மந்தப் பட்ட அலுவலரிடம் கடிதம் பெற்ற பிறகே செய்து தர வேண்டும். அவ்வாறு இன்றி அரசு அலுவலக ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக