உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

6000 ஒப்பந்த பணியாளர்கள் மின்வாரியத்தில் நிரந்தரம்


 
                 மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கினார். 
 
பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கி அமைச்சர் பேசியது: 
 
                  மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் படிப்படியாக ஆண்டுதோறும் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 2007-ம் ஆண்டில் 6,000 ஒப்பந்தப் பணியாளர்களும், 2009-ல் 6,000 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டு 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மின் வாரியத்துக்கு ரூ.65 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மீதியுள்ள 3,600 ஒப்பந்தப் பணியாளர்கள் அடுத்த ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். 
 
ஐ.டி.ஐ. தகுதி பரிசீலிக்கப்படும்: 
 
                    மின் வாரியப் பணி நியமனங்களில் ஒப்பந்தப் பணியாளர்களையும், ஐ.டி.ஐ. கல்வித் தகுதி உள்ளவர்களையும் 1:1 என்ற விகிதத்தில் நியமிக்க வேண்டும் என்ற நீதிபதி மாலித் குழுவின் பரிந்துரை மின்வாரியத்தில் பின்பற்றப்படுகிறது.ஐ.டி.ஐ. தகுதி பெற்ற 4,000 பேர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ. 2,500 சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காலமுறை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior