உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

பி.இ. தகுதி மதிப்பெண் குறைப்புக்கு அரசாணை எப்போது?

                  பி.இ. தகுதி மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்தது தொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.
 
                தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளில் 2010-11-ம் ஆண்டு முதல் சேருவதற்கான தகுதி மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்து அரசு கடந்த மாதம் அறிவிப்புச் செய்தது. அரசாணை வெளியிடப்பட்டால்தான் தகுதி மதிப்பெண் சதவீதத்தை 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முடியும் . பி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பாக சமவாய்ப்பு எண் வெளியிடுதல், தரவரிசைப் பட்டியல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ள வேளையில், அரசாணை வெளியிடப்படாததால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பான அண்ணா பல்கலைக்கழகம் தயக்கத்தில் உள்ளது.தகுதி மதிப்பெண் சதவீதம் குறைப்பு, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து ஆகிய காரணங்களால் பி.இ. படிப்புக்கான விண்ணப்ப விற்பனை இந்த ஆண்டு 2 லட்சத்தை தாண்டியது. இவ்வளவு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்றுள்ளது, தமிழகத்தில் இதுவே முதல் முறை.
 
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:
 
                     பி.இ. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பல்வேறு பகுதிகளில் இருந்து தபால் மூலம்  மே 31-ம் தேதி அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. புதன்கிழமை வரை 1.71 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மீதியுள்ள விண்ணப்பங்கள் வியாழக்கிழமை பெறப்படவுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ள 1.08 லட்சம் அரசு ஒதுக்கீட்டு  இடங்களுக்கு சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் போட்டியிடும் நிலை உள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior