உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

B.A (Tamil) - இளங்கலை பட்டபடிப்பு வழங்கும் கல்லூரிகள்

B.A (Tamil) - இளநிலை பட்டபடிப்பு வழங்கும் கல்லூரிகள் 

Course Group: B.A
Course Name: B.A Tamil
Category: Graduation
Duration: 3 Years
Details: Eligibility : Higher Secondary (Plus 2)  Higher Education options : B.Ed, M.A



    1. A.A. Govt. Arts College for Men, Namakkal
    2. A.P.A. College of Arts and Culture,
    3. A.P.C. Mahalakshmi College for Women
    4. A.R.C. Viswanathan College
    5. A.V.C College of Engineering
    6. A.V.S. College of Arts & Science
    7. A.V.V.M. Sri Pushpam College (Autonomous)
    8. Alagappa Government Arts College
    9. Anbu Arts And Science College
    10. Arcot Sri Mahalakshmi Women's College
    11. Arignar Anna Govt. Arts College for Women
    12. Arignar Anna Govt. Arts College, Cheyyar
    13. Arulmigu Palaniandavar Arts College For Women
    14. Arun Krishna College of Arts and Science
    15. Bharathi Arts and Science College
    16. Bharathi's Women's College
    17. Bharathiar University
    18. Bharathidasan Government College 
    19. Cardomom planters' Association College
    20. Cauveri College for Women
    21. Chikkaiah Naicker College
    22. D.G. Govt. Arts College for Women
    23. Devanga Arts College
    24. Dhanalakshmi Srinivasan College of Arts and Science for Women
    25. Dr. M.G.R. Chockalingam Arts College
    26. Dr. SNS college of atrs and Science 
    27. E.M.G. Yadava Women's College
    28. Fathima CollegeFatima College (Autonomous)
    29. Gem Gates Arts And Science College
    30. Gnanambigai College For Women
    31. Government Arts College (Men) Nandanam
    32. Government Arts College for Women - Salem
    33. Government Arts College, Ariyalur
    34. Government Arts College, Udumalpet
    35. Government Arts College, Udhagamandalam
    36. Government Victoria College
    37. Govt. Arts College (Autonomous) - Coimabatore
    38. Harur Muthu Arts and Science College for Women
    39. Indira Gandhi Jayanthi Women's College
    40. J.J College of Arts and Science
    41. Jai Sri Vankateswara Educational College
    42. Jamal Mohamed College
    43. K.R. College of Arts and Science
    44. Kamadhenu College of Arts and Science
    45. Karuppannan Mariappan College
    46. Kaveripakkam Arts & Science College
    47. Kcs Arts And Science of College For Women
    48. Khadir Mohideen College
    49. King Nandivarman College of Arts and Science
    50. Kongu College of Arts and Science
    51. Kundavai Nachiyar Govt. College for Women
    52. L.R.G. Govt. Arts College for Women
    53. Lady Doak College (Autonomous)
    54. Metas Adventist College
    55. N.M.S. Sermathai Vasan College for Wome
    56. National Arts And Science College
    57. National College
    58. Navarasam Arts and Science College for Women
    59. Nethaji Subash Chandra Bose College
    60. P.K.N. Arts and Science College
    61. Pachamuthu Arts And Science Women's College
    62. Pasumbon Muthuramalinga Thevar College, Melaneelithanallur
    63. Pavendar Bharathidasan College of Arts and Science
    64. Pee Gee College of Arts and Science
    65. Periyar E.V.R. College (Autonomous)
    66. PGP College of Arts And Science
    67. PMP College of Arts and Science
    68. Presidency College (Co-Education)
    69. PSG College of Arts and Science
    70. Queen Mary's College
    71. Rajeswari Arts and Scinece College for Women
    72. Sarah Tucker College
    73. Saraswathy College of arts and Science
    74. Selvamm Arts & Science College
    75. Sethupathy Govt. Arts College
    76. Shri SakthiKailassh Women's College
    77. Shrimathi Indira Gandhi College (Women)
    78. Shunmuga Industries Arts and Science College
    79. Siddhar Sivagnaani Arts and Science College for Men
    80. Sri Akilandeswari Women's College
    81. Sri Bharathi Arts & Science College for Women
    82. Sri Bharathivelu Arts and Science College
    83. Sri Ganesh College of Arts and Science
    84. Sri Kaliswari College
    85. Sri Kaliswari College
    86. Sri Parasakthi Women's College
    87. Sri Sarada Niketan College of Science for Women
    88. Sri Saradha Women's College
    89. Sri Vidhya Mandir Arts and Science College
    90. SRM University, Chennai
    91. Tagore Arts College
    92. Thassim Beevi Abdul Kadar College for Women
    93. The Standard Fireworks Rajarathinam College for Women (Autonomous)
    94. Theivanai Ammal College for Women
    95. Thiagarajar College (Autonomous), Madurai
    96. Thiru-Vi-Ka Govt. Arts College
    97. Thirukkoilur College of Arts and Science
    98. Thiruthangal Nadar Arts And Science College
    99. Thiruvalluvar College - Tirunelveli
    100. Thiyagaraya Govt. Arts And Science College
    101. Tirukkovilur College of Arts and Science
    102. Udaya College of Arts & Science
    103. University College - Thiruvananthapuram
    104. V.P. Muthiah Pillai Meenakshi Ammal College for Women
    105. V.P.M.M. Arts & Science College For Women
    106. Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College
    107. Voorhees College
    108. VPMM Arts And Science College for Women
    109. Yadava College


    Read more »

    விருத்தாசலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் தடை: முனைப்பு காட்டப்படுமா?


    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் காணும் பொங்கலன்று பொதுமக்கள் வீசிய பிளாஸ்டிக் பொருள்கள் (கோப்புப்படம்).
     
    விருத்தாசலம்:

            பிளாஸ்டிக் பொருள்கள் இயற்கைச் சூழலை மாற்றக்கூடிய ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருள் தடை குறித்த அரசின் விதிகள் வரவேற்கத்தக்கது என்றாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

                 பிளாஸ்டிக்கின் பயன்பாடு அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. முன்பெல்லாம் குறைந்த அளவில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தற்போது உணவகத்தில் சாப்பாட்டுக்காக பயன்படுத்தும் இலை முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் உணவு பரிமாறுதலில் பயன்படும் கப்புகள் வரை எல்லாம் பிளாஸ்டிக் பொருள்களாகிவிட்டது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான விருத்தாசலத்தைச் சேர்ந்த ஹபீப்ரஹ்மான் தெரிவித்தது: 

                  சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று ஏதாவது பொருள் வாங்க சென்றால் துணி பை எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் அந்த பழக்கம் அடியோடு மறைந்து வருகின்றது.டீ கடைகளில் சென்று டீ வாங்கிச் செல்பவர்கள்கூட குவளைகள் எடுத்து வருவதில்லை. மாறாக பால் கவர்களில் டீ பார்சல் வாங்கி செல்கின்றனர். இது வருந்தத்தக்க செயலும் உடல் நலனுக்கு கேடான செயலும் ஆகும்.பிளாஸ்டிக் மாசுபாடு என்பது மனித நலத்தை மட்டும் பாதிப்பதோடு இல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலையும் அதிகளவில் பாதிக்கின்றது.

                  நாம் பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பாலித்தீன் பைகளில் மழை நீர் தேங்கும்போது அதில் கொசுக்கள் இன பெருக்கம் அடைந்து, மலேரியா எனும் கொடிய நோயை உருவாக்குகின்றது. இதுபோல் குளம், ஏரி, ஆறு மற்றும் கடலில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருள்களை நீர் வாழ் உயிரினமான மீன்கள் உண்ணுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருள்களை உண்ணும் மீன்களை நாம் உணவாக உட்கொள்ளும்போது மலட்டுத் தன்மை. குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. 

                மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையும் கொண்டது.பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் பொருள்கள் மண்ணில் புதைவதால், மண்ணின் சூழலியல் தன்மை அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், மழைநீர் உள்வாங்கும் திறனை மண் இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

                    இதுமட்டுமல்லாமல் மருத்துவக் கழிவுகள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், டீ கப்புகள், மேசை விரிப்புகள், தண்ணீர் டப்பாக்கள் போன்றவற்றை எரித்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடும், நச்சுத் தன்மை வாய்ந்த சாம்பலும் உண்டாகி அதிக ஆபத்துக்கு வழி வகுக்கின்றது. மேலும் இதுபோன்ற பொருள்கள் சாக்கடை நீரில் கலப்பதால், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நோய் பரப்பும் கிடங்குகளாக மாறி வருகிறது. இன்று பல்வேறு ஆறுகள் சாக்கடை கால்வாய்களாக மாறி உள்ளதை நாம் காண்கின்றோம்.

                  பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களை தடுக்க அரசு சட்டங்கள் உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்து என்றாலும், அவற்றை முனைப்புடன் நடைமுறைபடுத்த வேண்டும். சட்டங்களும், விதிகளும், அரசும் மட்டுமே இத்தகைய பெரிய பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருதாமல், முடிந்த வரை பிளாஸ்டிக் உபயோகப் பொருள்களைத் தவிர்த்து மனித இனமும், சுற்றுச்சூழலும் வளமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

    Read more »

    சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்


    சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம்.
     
    சிதம்பரம்:
     
               சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.
     
    இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ்  தெரிவித்தது: 
     
                  சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம் பலவீனமடைந்ததால் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், அடித்தளம் பாதித்துள்ளதால் உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.அருகில் உள்ள புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது ரூ.30 லட்சம் செலவில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், கான்கிரீட் தளம், ஷட்டர் உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவே பொதுமக்கள் இப்பாலத்தில் பயணத்தை தவிர்த்து புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் செல்வராஜ் .

    Read more »

    பண்ருட்டியில் 2000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


    பூமியில் புதையுண்டு கிடந்த தாழி

    பண்ருட்டி:
     
                பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியும், அதனுள் இருந்த மண்பாண்டங்கள், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

                உலகமும், மனித இனமும் தோன்றிய நாள் முதல், மனிதர்களின் நாகரிகங்களும், கலாசாரங்களும் ஓவ்வொரு நூற்றாண்டுக்கும் மாறுபட்டும், வேறுபட்டும் வந்துள்ளன. உணவிலும், உடையிலும், அணிகலன்களிலும், வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதிலும் காலம் காலமாக புதிய புதிய பரிணாமங்கள் கையாளப்பட்டு வந்துள்ளன. மனிதர்கள் இறந்தபோன பின்னர் செய்யப்படும் ஈமச்சடங்குகளிலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டு வந்துள்ளது. அவற்றில் ஒன்று ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழியாகும். இதுபோன்ற தாழிகள் நிறைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள சூரக்குப்பம் கிராமப் பகுதியில்  இதுபோன்ற தாழிகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் அண்மையில் கண்டறிந்தார்.

    இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது:

                 முதுமக்கள் தாழிகளின் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. மன்னர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவர்கள் இறந்தவுடன் இதுபோன்ற தாழிகளில் வைத்து புதைக்கும் வழக்கம், சங்கக் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் 100 வயதுக்கு மேல் கடந்து முதிர்ந்து நடக்க முடியாமல் உடலின் கழிவுகளை இருக்கும் இடத்திலேயே போக்கி குடும்பத்தினரையும், உறவினர்களையும் முகம் சுளிக்க வைத்த மூத்தோர்களின் செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நீராட்டி, தூப தீபம் காட்டி இதுபோன்ற தாழிகளுக்குள் இறக்கி வைத்துவிடுவர்.

                 அந்த தாழிக்குள் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், தண்ணீர், கள் போன்றவற்றை பாத்திரங்களில் வைத்து அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து தாழியை மூடி விடுவர். சுவாசிக்கும் காற்று அடைபடுவதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுவர். ஒரு வகையில் இதை கருணைக் கொலை என்றும் கூட கூறலாம். இவ்வழக்கில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு ஞானிகளும், முனிவர்களும் தங்களின் இறப்புக்கு  தாங்களே நாள் குறித்து அந்த நாளில் தங்கள் சீடர்கள் முன்னிலையில் தாழியில் அமர்ந்து மூடச் செய்து இறைவனை தியானித்து உயிர் நீர்த்தவர்களும் உண்டு என்கிற செய்தியும் வரலாற்று இலக்கியங்களால் அறியப்படுகிறது.

                   இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கோடிக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாழிகள் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க பொக்லைன் இயந்திரம்  மூலம் பூமியை தோண்டியபோது உடைந்து கிடைத்தன. இப்பகுதியில் இதுபோன்ற தாழிகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கு கிடைத்த தாழியின் சுற்றளவு 190 செ.மீ, உயரம் 56 செ.மீ என ஒரு தாழிக்கு மேல் மற்றொரு தாழியாக 4 அடுக்குகள் கொண்ட தாழியாக மொத்தம் 224 செ.மீ. உயரத்துக்கு காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பு கிடைப்பது மிகமிக அரிதாகும்.

                   பொதுவாக இதுபோன்ற முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புகளும், மண்ணால் செய்யப்பட்டு சூளையிட்ட உணவு தட்டுகளும், குடுவைகளும், விதவிதமான கலயங்களும், விளக்குகளும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். அதுபோன்றே  இந்த தாழியிலும் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் அச்சில் வார்த்தது போல் துல்லியமாக செய்யப்பட்டுள்ளன. இவை அக்காலத்து மண்பாண்டக் கலையின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.

                     சில ஊர்களில் கிடைத்துள்ள தாழிகளில் போர் வீரர்கள் பயன்படுத்திய சிறிய, பெரிய கத்திகள், குறுவாள்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்கள் துருபிடித்துள்ள நிலையில் கிடைத்துள்ளன. அதுபோன்று இந்த தாழியில் ஏதும் காணப்படவில்லை. இந்த தாழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

    Read more »

    அசுத்தத்தின் பிடியில் கடலூர் மையப் பகுதி

    கடலூர்:

                   குப்பைகள் நிறைந்த அசுத்தத்தின் பிடியில் கடலூர் நகரின் மையப்பகுதி சிக்கித் தவிக்கிறது. 

                 கடலூர் பஸ் நிலையம் அருகே 200 வணிக நிறுவனங்களைக் கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துத்துக்குள் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள். இந்த வணிக வளாகம் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் நகராட்சி விதிகளுக்கு உள்பட்டு அமைக்கப்படவில்லை. மிகவும் குறுகலான சாலைகள் காரணமாக, ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதே மிகவும் கடினம்.

                     பல மாடிகளைக் கொண்ட லாட்ஜுகளும் இங்கு இடம்பெற்று உள்ளன. இந்த வணிக வளாகம் எப்போது பார்த்தாலும் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது. அசுத்தத்தின் உச்சத்தில் இருப்பது மட்டுமன்றி, இப்பகுதிக்குள் கட்டாயத்தின்பேரில்  வந்துபோகும் பொதுமக்கள், நிச்சயம் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயமும் நீடித்து வருகிறது. இந்த வணிக வளாகத்துக்குள் ஏராளமான மொத்த வணிகம் செய்யும் பூக்கடைகள் உள்ளன. அவைகள் வெளியேற்றும் அழுகல் பூக்களின் கழிவுகளால், ஏற்படும் சுகாதாரக் கேடுகள்தான் மிக அதிகம் என்று, பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

                        எனினும் இது குறித்து நகராட்சி அதிகாரிகளைக் கேட்கும் போதெல்லாம், இந்த தனியார் வணிக வளாகம் நகராட்சியின் அங்கீகாரம் பெறாத லேஅவுட்டில் உள்ளது. எனவே நகராட்சி, குப்பைகளை அகற்றவோ, அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவோ இயலாது என்று அடிக்கடி கூறிவந்தனர். ஆனால் அண்மையில் இந்த லேஅவுட்டுக்கு நகராட்சி அங்கீகாரம் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த வணிக வளாகம் குப்பை மேடுகள் நிறைந்தது என்ற அந்தஸ்தில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.

    இது குறித்து அப்பகுதி நகராட்சி உறுப்பினர் கூறுகையில்,

                          "இந்த தனியார் வணிக வளாகத்துக்கு 6 மாதங்களுக்கு முன், நகராட்சி அங்கீகாரம் அளித்து உள்ளது. சாலைகள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. எனவே தனியார் வணிக வளாகமாக இருந்த போதிலும், அங்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தீர்மானித்து உள்ளது நகராட்சி. குப்பைகளும் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும் என்றார்.தனியார் வணிக வளாகத்துக்கு, நகராட்சி அங்கீகாரம் அளித்த பிறகும், வணிக வளாகம் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது என்பது, மக்களுக்கு மேலும் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

    Read more »

    கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் சரியாக பாடம் நடத்துவதில்லை: அழகிரி எம்.பி

    கடலூர் : 

                 ""கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை,'' என அழகிரி எம்.பி., பேசினார். 

    கடலூரில் நடந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாட்டில் அவர் பேசியது:

                  சமுதாயத்தில் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவுவது கல்வி. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 44 பல்கலைக் கழகங்கள் இருந்தன. கடந்த 2004க்கு பிறகு 44 தனியார் பல்கலைக் கழகங்கள் உருவாகியுள்ளன. இதை வளர்ச்சி என்று சொல்வதா, உள்நோக்கம் உள்ளதா என, சிந்திக்க வேண்டும். இது விவாதிக்கப்பட வேண்டிய கருத்து.

                  அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் 85 சதவீதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 11 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 10 மாணவர்களுக்கு சிலருக்குத் தான் வேலை கிடைக்கிறது. பி.இ., படிக்கும் நான்கு மாணவர்களில் ஒருவருக்குத் தான் வேலை கிடைக்கிறது. 

    மீதியுள்ள மூன்று மாணவர்களை தரமானவர்களாக உருவாக்கவில்லையா... 

                 கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கடந்த 10 ஆண்டு காலமாக ஒரே பாடத் திட்டத்தை படித்து வருகிறோம். சீனா, அமெரிக்கா நாடுகளில் காலத்திற்கேற்ப புதுப் புது பாடத்திட்டங்கள் ஆண்டுதோறும் புகுத்தப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என, ஆய்வு கூறுகிறது. இதைப் பார்க்கும் போது தனியார் பள்ளிகள் பரவாயில்லை. உங்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்பட வேண்டியது தான். எல்லா கல்விக்கூடங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே, பள்ளிகளை ஆய்வு செய்து, கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார்.

    Read more »

    கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா

    கடலூர் : 

                கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் "எக்நைட்ஸ்' மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மன்ற துவக்க விழாவிற்கு கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மின்வாரிய பொறியாளர் வாசுதேவன் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்தார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் அலமேலு நாச்சியப்பன் சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் குமார் வாழ்த்திப் பேசினர்.

    Read more »

    தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல், தொடர்பியல் துறை தேசிய கருத்தரங்கம்

    திட்டக்குடி : 
     
               தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. 

                   நிர்வாக இயக்குநர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பொன்செல்வராஜ் வாழ்த்திப்பேசினர். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

    புதுச்சேரி பொறியியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் தனஞ்செழியன் பேசியது: 

                மாணவர்கள் உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவில் தற்போது தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைக்கற்றை மூலம் செய்திகளை தங்கு தடையின்றி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பரிமாறிக்கொள்ள முடியும். இதுபோல மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக் கற்றையினை நாம் இந்தியாவிலும் பயன்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

                   விழாவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனுவாசன் பொறியியல் கல்லூரிகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விரிவுரையாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்

    Read more »

    அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம்

    காட்டுமன்னார்கோவில் : 

                அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர் பங்கேற்கும் 5 நாள் சிற்றூர் சீரமைப்பு முகாம் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புல மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம் கடவாச்சேரி கிராமத்தில் துவங்கியது. 

                    ஐந்து நாள் நடைபெறும் இம்முகாமில் 100 மாணவிகள் உட்பட 300 பேர் பங்கேற்கின்றனர். கடவாச்சேரியில் நடந்த துவக்க விழாவிற்கு என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சுதாகர் வரவேற்றார். குமராட்சி சேர்மன் மாமல்லன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேளாண் புல முதல்வர் வசந்தகுமார் முகாமை துவக்கி வைத்தார். 

                   துறைத் தலைவர்கள் குருதேவ், பிரகாஷ், சுந்தரவரதராஜன், தலைமை ஆசிரியர் மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடவாச்சேரி, நடுத்திட்டு, கூத்தன்கோவில், உசுப்பூர், சிவபுரி, திட்டு ஆகிய கிராமங்களில் மாணவ, மாணவிகள் தங்கி தூய்மைப் படுத்துதல், மரம் நடுதல், கல்வி பயிற்சி அளித்தல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    Read more »

    சிதம்பரம் அருகே போலி பல்பொடி தயாரிப்பு

     சிதம்பரம்:

                   மதுரையில் உள்ள பிரபல பல்பொடி கம்பெனி பெயரில் சிதம்பரம் பகுதியில் போலி பல்பொடி விற்கப்படுவதாக அந்த கம்பெனிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பல்பொடி கம்பெனி நிர்வாகத்தினர் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

                 இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் அருகே வயலூரில் அரசு போக்குவரத்து பணியாளர் குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் போலி பல்பொடி தயாரிக்கப்படுது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிரபல கம்பெனி பெயரில் போலி பல்பொடி தயாரித்த சிதம்பரம் அருகே புவனகிரி சின்ன தேவாங்க தெருவை சேர்ந்த நீலகண்டன் மகன் மகேஸ்வரன் (44) என்பவரை கைது செய்தனர்.

                   மேலும் பல்பொடி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை மூல பொருட்கள், எசன்சுகள், 44 பெட்டிகளில் 500 பாக்கெட்டுகள் வீதம் தயாரித்து அடைக்கப்பட்டிருந்த போலி பல்பொடிகள், பேக்கிங் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். பிரபல கம்பெனி பெயரில் போலி பல்பொ தயாரித்து விற்கப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Read more »

    கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறை மீன் பிடிக்க மீனவர்களுக்கு பயிற்சி

    கடலூர் முதுநகர்:

                    கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறைமீன் பிடிக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்தும், மீன் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிவகைகுறித்தும் மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் லட்சக்கணக்கான சூறை மீன்கள் உள்ளன.

                     மீனவர்கள் சாதாரண முறையை கடைபிடிப்பதால் வலைகளில் இந்த மீன்கள் அதிக அளவில் சிக்குவதில்லை.எனவே பிற மாநில, மற்றும் வெளிநாட்டு மீனவர்கள் அதிகம் பிடித்து செல்கின்றனர். எனவே தமிழக மீன்வளத்துறை நவீன முறையில் சூறைமீன் பிடிக்கும் பயிற்சி வகுப்புகளை கடலோர மீனவர்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.

                    அதன்படி கடலூர் துறைமுக பகுதி மீனவர்களுக்கு 5 நாள் பயிற்சி வகுப்பும், 2 நாட்கள் ஆழ்கடலில் சென்று செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து கடலூர் துறைமுக பகுதியில் செய்வதற்காக மீன்வளத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
     
    பின்னர் இது குறித்து 
    மீன்வளத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன்ன் கூறியது:-

                  மருத்துவ குணம் வாய்ந்த சூறை மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.1500 விலை போகிறது.முறையான பயிற்சி இல்லாததால் இந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை. பெரும்பாலும் வெளிநாட்டினர் அதிகளவில் விரும்பி உண்ணுவதால் நாட்டில் மீன்களின் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும். மீனவர்களும் நல்லமுறையில் பயனடைவார்கள். சென்னையில் உள்ள மீன்வளத்தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி நிலையத்தில் இருந்துவரும் சிறப்பு அதிகாரிகள் மீனவர்களுக்கு பயிற்சி அளித்து இதற்கான மாதிரி நவீன உபகரணங்களை வைத்து செயல் முறை விளக்கம் கொடுப்பார்கள். பின்னர் இதனை மீனவர்கள் மானிய விலையில் வாங்கலாம். இவ்வாறு துணைஇயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    Read more »

    Helping mentally challenged children

    CUDDALORE: 

              The Cuddalore Educational Foundation conducted a “special health and consultation camp” on the premises of “Dhaya - special school for mentally challenged students” here on Saturday.

                Specialists from Mahatma Gandhi Medical College and Research Centre, Puducherry, briefed the parents of mentally challenged children on how to cope with their wards and train them in leading a productive life. Parents and representatives of service organisations from Cuddalore, Anna Gramam, Parangipettai, Kurinjipadi and Chidambaram participated. T. Srinivasan, District Officer, Differently abled Persons' Welfare Department, G.S. Sundaram, president of the foundation, R. Ganapathi, secretary, and Rajagopal, president of the Parents-Teachers' Association, spoke.

    Read more »

    சனி, பிப்ரவரி 26, 2011

    கடலூர் மாவட்ட வலைபூக்கள் - பகுதி 4

    கடலூர் மாவட்ட வலைபூக்கள் 


    கடலூர் மாவட்ட நண்பர்களின் வலைபூக்கள் பகுதி 4 

    http://thamizhanthadaiyam.blogspot.com/- தமிழன் தடயம்
    http://microbleo.blogspot.com/ - THE BEST or NOTHING

    Read more »

    கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி 300 மாணவர்கள் படிக்கும் வசதியுடன் அமையும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    கடலூர்:

                 300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

                 கடலூர் அருகே வெள்ளக்கரை, ஆயிபுரம் கிராமங்களில் தலா ரூ. 21.79 லட்சத்தில் கட்டப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் புதன்கிழமை திறந்து வைத்தார். 

    விழாவில் அமைச்சர் பேசியது:  

                    கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடலூரில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும்.  இது 300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக அமையும். எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வரும் முதல்வர் கருணாநிதிக்கு, மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.  கடலூர் அருகே ராமாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனையும், குடிகாடு, ஊராட்சி ஈச்சங்காடு, சேடப்பாளையம் கிராமங்களில் அங்கன்வாடி மையங்களையும், பிள்ளையார்மேடு கிராமத்தில் ரேஷன் கடையையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.  

    சின்னகாரைக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.03 கோடியில் கட்டப்பட இருக்கும் 15 வகுப்பறைக் கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:  

                   கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 25 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.  81 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டு உள்ளன. முதல்வர் ஆண்டுதோறும் 100 பள்ளிகளைத் தரம் உயர்த்த உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்றார் அமைச்சர்.  நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Read more »

    6 அலோபதி மருந்துகளுக்கு தமிழக அரசு தடை

               தமிழக அரசு 6 அலோபதி மருந்துகளுக்கு வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் துறை சில அலோபதி மருந்துகளுக்கு அண்மையில் தடை விதித்தது. 

    அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

                  12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு "நிமுஸ்லைடு', அது தொடர்பான கலவைகள்; "சிஸாபிரைடு', அது சேர்ந்த கலவை; "பினைல் புரோப்பலமைன்', அது சார்ந்த கலவை மருந்துகள்; மனித தொப்புள் கொடி நஞ்சுச்சாறு, அது சார்ந்த கலவைகள், "சிபுட்ரைமன்', அது சார்ந்த கலவைகள்; "ஆர்.சிபுட்ரைமன்', அது சார்ந்த கலவைகள்.

                   மேற்கூறிய மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more »

    கடலூர் மாவட்டத்தில் மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி

    கடலூர்:

                  மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி வழங்கப்படும், மேலும் தகவல் அளிப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மின் வாரியம் அறிவித்து உள்ளது.  

    கடலூர் மின் வாரிய செயற்பொறியாளர் சி.மூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

               மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்தி, மின் திருட்டை அறவே ஒழிக்குமாறு மின் நுகர்வோர் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மின் திருட்டு பற்றி தகவல் தெரிவிப்போருக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாப்பப்படும்.  மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாரியப் பணியை முறையாகச் செய்வதற்கு, மின் நுகர்வோர் உரிய ஒத்துழைப்பு அளிப்பதுடன் மின் சேமிப்பின் அவசியத்தையும் கருதி, விதிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

                    மின் திருட்டில் ஈடுபடுவோரது மின் இணைப்பு  துண்டிக்கப்படுவதுடன், அபராதம், சிறை தண்டனைக்கு ஆளாக நேரிடும். மின் நுகர்வோர் தங்களது மின்சார மீட்டரைத் தவிர்த்தல், சேதப்படுத்துதல், அதில் உள்ள பாதுகாப்பு முத்திரைகளைச் சேதப்படுத்துதல், போலி முத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றிóல் ஈடுபட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அண்டை வீட்டின் பயன்பாட்டுக்கோ, தொழிற்சாலைக்கோ. கட்டுமானப் பணிக்கோ பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதம், சிறை தண்டனைக்கு உரிய குற்றமாகும்.  

                      விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை, தொழிற்சாலைக்கோ, கட்டுமானப் பணிக்கோ, நீர் இறைத்து விற்பனைக்கோ, செங்கல் சூளைக்கோ, வீட்டு உபயோகத்துக்கோ பயன்படுத்தினால், மின் இணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்பு பெற வேண்டும். குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஒரு 40 வாட்ஸ் விளக்கு, 70 வாட்ஸ் இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதல் மின் பளு உபயோகித்தால், மின் துண்டிப்பு, அபராதம், சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    Read more »

    மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

    சிதம்பரம்:

                அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கவியல் துறை கல்வி பரிமாற்றம் செய்து கொள்ள அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

               பல்கலைக்கழக துணைவேந்தர் விடுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மெக்சிகன் பல்கலைக்கழக உலக சுகாதார மைய இயக்குநர் டாக்டர் சோபியா மெஹ்ஜ்வேர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.  நிகழ்ச்சியில், மெக்சிகன் பல்கலை இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் பாலகிருஷ்ணன், செயல் இயக்குநர் ராணிகோட்டா, மருத்துவப் புல முதல்வர் என்.சிதம்பரம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                     இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க மருந்து முறைப்பணி நடைமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.  மேலும் நாட்டிலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களை விட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும் டி.பார்ம் பிரிவு மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவும், உயர் கல்வித் தரத்தையும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

    Read more »

    சிதம்பரம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர்

    கிள்ளை:

             சிதம்பரம் அருகே கிள்ளை சிசில் நகரில், தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

                   கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை சிசில் நகரில், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் சிவா, ஆலோசகர் சித்தம்மா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

                    கூட்டத்தில், எஸ்.டி., இருளர் வசிக்கும் பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு இருளர் ஜாதிச்சான்று வழங்க வேண்டும். ரேஷன் கார்டு, வீட்டுமனை மற்றும் வீட்டு மனை மாற்றம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், பழங்குடி இருளர் நல வாரியம் அமைக்க ‌வேண்டும். ஓட்டுரிமை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, குடிநீர், மயானம் மற்றும் சாலை வசதிகள், தனி ரேஷன் கடை, எஸ்.டி., - எஸ்.சி., இனத்தவருக்கு தனி போலீஸ் ஸ்டே ஷன் அமைக்க ‌வேண்டும்.அரசு அறிவித்தது போல், எஸ்.டி.,யினருக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம், இலவச "டிவி', காஸ், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,  தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Read more »

    தமிழகத்தில் விரைவில் 11,307 ஆசிரியர்கள் நியமனம்

    தமிழகத்தில் விரைவில் 11,307 ஆசிரியர்கள், 648 ஆசிரியர் அல்லா ஊழியர்கள் பள்ளிகளில் நியமிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.  1999ம் ஆண்டு மே மா‌தம் வரையிலான காலத்தில் அனுமதி பெற்ற சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத‌ பள்ளிகளில் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read more »

    அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு தேர்வு விண்ணப்பம் விற்பனை

    சிதம்பரம்:
     
                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12-ம் கல்வி ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மஸி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

                   பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை) போன்ற பட்டபடிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தின் விலை ரூ.400. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மசி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும்.    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-3-2011. பல்கலைக்கழகத்தின் வகுப்புகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து பயில இந்த நுழைவுத்தேர்வு அவசியம் என்றும் இந்த மார்ச் மாதம் பிளஸ்2- தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.

                மேலும் இந்த விண்ணப்பங்களை வேலை நாட்களில் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    Read more »

    Sale of entrance test applications on

    CUDDALORE: 

              Filled-in applications for writing entrance examination to get admission to B.E., B.Sc (agriculture), B.Sc (horticulture), M.B.B.S., B.D.S., B.P.T., B.Sc (nursing) and B.Pharm., programmes of Annamalai University should reach the university by March 31, 2011. A statement from the university said Vice-Chancellor M.Ramanathan inaugurated the sale of applications on the university premises on February 23. The applications could be obtained either in person or by post.

    Read more »

    Compensation sought of Rs. 50 lakh

    CUDDALORE: 

            Members of Samuga Samathuva Padai, led by its founder P.Sivagami, former IAS officer, observed fast in front of the Collectorate here on Friday. They demanded a compensation of Rs. 50 lakh and two acres of land to the family of A.Subramanian (30) of Kambalimedu, who died following an attack on Masi Maham day.

    Read more »

    வெள்ளி, பிப்ரவரி 25, 2011

    கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிப்பு

    கடலூர்:

                    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.  

    ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

                  சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதனகிழமை நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த மற்றும் மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் முதல் முறையாக, லேப்-டாப் மற்றும் வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  ÷கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த, மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளைத் தேர்வு செய்து, அவற்றில் லேப்-டாப் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 

                 மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா பொருத்துவது மூலம், வாக்குப் பதிவு தொடங்கியது முதல் எவ்விதத் தடங்கலும் இன்றி வாக்குப் பதிவு நடைபெறுகிறதா என்றும், வாக்குப் பதிவு முகவர்களும், அலுவலர்களும், சரியாக வாக்குப் பதிவை நடத்துகிறார்களா என்றும், சென்னை மற்றும் புதுதில்லியில் உள்ள தேர்தல் ஆணையம் நேரிடையாகக் கண்காணிக்க முடியும். வாக்குப் பதிவு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள வெப் கேமராவை பார்வையிட்டு வாக்குப் பதிவு முறையாக நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றார் ஆட்சியர்.  

                    வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, மாணவ, மாணவியரிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தை, வலியுறுத்த வேண்டும். கணினி படிப்பு முடித்த மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ, மநாணவியர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுப டுத்தப்பட உள்ளனர் என்றும் ஆட்சியர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.  கூட்டத்தில் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, 10-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

    Read more »

    தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

                   சி.என்.என்., நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. விருதை, துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

                  சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. 

                     இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. டில்லியில் 23ம் தேதி நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளை, முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காண்பித்தார்

    Read more »

    தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    கடலூர் : 

              தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.
     
    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது: 

                கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி சிகிச்சை பெறுவதற்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முதல்வரின் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவியால் தமிழகத்தில் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் முதல்வருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.ஜெயச்சந்திரன், இந்திரா ராமச்சந்திரன், செல்வரங்கன், முத்து பெருமாள், முடிவண்ணன், டாக்டர்கள் ரூபாவதி, மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

    Read more »

    திட்டக்குடி பகுதியில் மேம்பால கட்டுமான பணி: அதிகாரிகள் ஆய்வு

    திட்டக்குடி : 

               திட்டக்குடி பகுதியில் நடந்து வரும் மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திட்டக்குடி வெள்ளாறு தரை பாலத்திலும், முருகன்குடி தரை பாலத்திலும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 

                   கடந்த மழையின் போது கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். அதேபோல், ராமநத்தம்- பெண்ணாடம் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர். கோட்ட பொறியாளர் உத்ராபதி, உதவி கோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் ஆன்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    Read more »

    கடலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து விற்பனை நிலையம்

    கடலூர் : 

             கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 50 மருந்து கடைகளை புதியதாக திறக்கவேண்டுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் ஒரு பிரிவும், புதுப்பாளையத்தில் மற்றொரு மருந்து பிரிவும் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

                   புதிய மருந்து பிரிவை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இணைப்பதிவாளர் வெங்கடேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு அதிகாரி மிருணாளினி உட்பட பண்டகசாலை ஊழியர்கள் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களின் நலன்கருதி இப்பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Read more »

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி

    சிதம்பரம் : 

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 

                  வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி,  மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

    Read more »

    என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது ஏன்?: கி.வீரமணி

    நெய்வேலி:

     திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                   நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் பணியாற்றியிருந்தும் ஓய்வூதியம் இன்றி வெறுங்கையோடு திரும்பியோர்களின் நிலை கவனிக்கப்படவேண்டும். இவ்வளவுக்கும் என்.எல்.சி. என்பது இலாபம் கொழிக்கச் செய்யும் நவரத்தினங்களுள் ஒன்றாகும்.

               இந்த நிலைக்குக் காரணம் அந்நிறுவனத்தில் அயராது பணியாற்றிய தோழர்களின் விலை மதிக்கமுடியாதபேருழைப்பாகும். 1995 ஓய்வூதிய திட்டத்தில் என்.எல்.சி. நிறுவனமும், திருச்சி பிராவிடண்ட் ஃபண்டு ஆணையமும் உரியகாலத்தில் ஊழியர்களைச் சேர்க்காதது ஊழியர்களின் குற்றமல்ல; அவர்கள் செய்த தவறுக்குப் பாதிப்பினைச்சந்திப்பவர்கள் ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

                      ஓய்வூதியம் பெற்றிட இயலாமல் வயது 70 முதல்80 வயதுவரை கடந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது அவர்களின் வயோதிகக் காலத்திற்கு உதவும் கைத்தடியாக இருக்கும். நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும்கூட என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது - ஏன்? மற்ற மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் (ஓ.என்.ஜி.சி. போன்றவைகளில்) ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், என்.எல்.சி., ஊழியர்களுக்கு மட்டும் அது கிடைக்காதது ஏன் என்பது நியாயமான கேள்வியாகும்!

                      ஓய்வூதியமோ, உதவித் தொகையோ அல்லது கருணைத் தொகையோ ஏதோ ஒரு பெயரில் பல்லாண்டுகாலம் உழைத்தோருக்கு அளிக்கப்படுவதுதான் நியாயமும், மனிதநேயமும் ஆகும்.  மத்திய அரசு ஆவன செய்யவேண்டும். நமது முதலமைச்சர் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ள என்.எல்.சி.ஊழியர்களின் இந்தப் பிரச்சினையைக் கவனிக்கவேண்டும். மத்திய அரசுக்குத் தெரிவித்து ஆவனசெய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

    Read more »

    Infants' health scheme to be launched tomorrow

    CUDDALORE: 

                Chief Minister M. Karuannidhi will launch a new health scheme for infants on Saturday.

               Under the scheme, newborn babies to infants up to one year can undergo free treatment worth Rs. 1 lakh, according to M.R.K. Panneerselvam, Health Minister. He was speaking at the inauguration of a medical shop of Saravanabhava Cooperative Wholesale Supermarket on Beach Road here on Thursday. Later, the Minister inaugurated two Primary Health Centres at Vellakarai and Ayipuram, each built at a cost of Rs. 21.79 lakh.

               The Minister also inaugurated a sub-centre of Animal Husbandry Department at Ayan Ramapuram, and, anganwadis at Echangadu and Sedarpalayam, and a part-time ration shop at Chinna Pillaiyarmedu. At Chinna Kaaraikadu, the Minister attended the ground breaking ceremony for the construction of 15 additional classrooms to be built at a cost of Rs. 1.03 crore in the village school. The new wing would be ready in six months. District Revenue Officer C. Rajendran, Joint Director (Health) Kamalakannan, Deputy Director (Health) R. Meera and others participated.

    Read more »

    Students, villagers fall from boat Near Cuddalore

    CUDDALORE: 

             A manually operated boat carrying students and villagers, numbering about 30, across the Uppanar near here tilted on one side near Semmanguppam on Thursday. Some of the students and villagers fell into the hip-deep water.

            A. Isai Amudhu (25) of Nochikadu who drank excess water has been hospitalised. She is said to be recovering. Those who developed nausea were given fist aid. The boat service, run by the local panchayat between Nochikadu and Semmanguppam was unusually crowed as the bus services from Nochikadu, Thiruchopuram, Thiagavalli and the surrounding areas to Cuddalore town have been suspended for the past few days following tension over the Masi Maham festivities.
    Collector P. Seetharaman said that he had instructed Superintendent of Police Ashwin Kotnis to make arrangements for speedy restoration of the bus services.

    Read more »

    Concern over delay in fixing fee structure

    CUDDALORE: 

             The inordinate delay in fixing the fee structure in matriculation schools will complicate the issue and cause disquiet among parents and students.

                If not resolved within a timeframe, it will throw school education out of gear for the coming academic year, according to K. Rajendran and C.R. Lashmikandhan, patron and district president respectively of the Matriculation Schools Management Association, Cuddalore. The Association held a conference of management representatives, headmasters and staff of the member schools here recently to discuss the problems arising out of the long-drawn fee fixation procedures adopted by the Ravirajapandian Committee.

    Read more »

    வியாழன், பிப்ரவரி 24, 2011

    கடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்


    அணைக்கரை மேற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு.
     
    சிதம்பரம்:
          
              சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
              
                 தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. 
     
                 இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாலத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ்பகுதி சீரமைப்புப் பணி முடிவுற்று தற்போது பாலத்தின் மேல்பகுதி சீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாலத்தின் ஷட்டர் சீரமைக்கப்படுவதால் கீழணையிலிருந்து வீராணத்துக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
     
                  கீழணை பாலம் சீரமைப்புப் பணி மார்ச் 31-ல் முடிவுற்று ஏப்ரல் முதல் வாரத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார். பாலத்தில் அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பஸ்கள் அதிகம் வரவில்லை. இதனால், தஞ்சை, கும்பகோணம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு சென்று வர அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை தடத்தில் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
                     விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிர  ஸ் மற்றும் விரைவு பாசஞ்சர் ரயில்கள் ஆகியவை தற்போது அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை, கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Read more »

    களையிழந்த கடலூர் சில்வர் பீச்

    கடலூர்:

                  நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலட்சியம் காரணமாக, கடலூர் சில்வர் பீச் களையிழந்து காணப்படுகிறது.  

                    கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் சில்வர் பீச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடலூர் சில்வர் பீச் வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பணம், பல்வேறு துறைகள் சார்பில் செலவிடப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக் காலமாக ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளை முறையாக பராமரிக்காமலும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமலும், சில்வர் பீச் புறக்கணிக்கப்பட்டும் கேட்பாரற்றும் கிடக்கிறது.  

                    ஆனால் கடற்கரைப் பக்கம் தலைகாட்டும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் மட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடற்கரையை வந்து எட்டிப் பார்த்துத் திரும்பினாலே போதும் கட்டணத்தக் கரந்து விடுகிறார்கள்.  இங்கு கடைபோடும் வணிகர்களுக்கும் கட்டணம் உண்டு. கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் தான். அதுவும் கோடைக்காலம் நெருங்கி விட்டால், கடலூர் மக்கள் பலரும் நாடும் ஒரே இடம் இக்கடற்கரைதான்.  

                          அண்மைக் காலமாக சில்வர் பீச் பராமரிப்புக்கு அப்பார்ப்பட்ட இடமாகக் காட்சி அளிக்கிறது. 18-ம் தேதி மாசி மகத் திருவிழாவுக்கு வந்த மக்கள் கூட்டம், அவர்களை நம்பி பொருள்களை கடைவிரித்த சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து, கடற்கரையை அசுத்தத்தின் உயர் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டனர்.  இதனால் மெரீனாவுக்கு அடுத்த அழகான கடற்கரை என்ற பெயர் பெற்ற சில்வர் பீச் இன்று, அலங்கோலமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான படகு குழாம், இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது.  

                  குப்பைகளை அகற்ற தற்போது புதிய கலாசாரம் சில்வர் பீச்சில் உருவாகி இருக்கிறது. கரும்புச்சாறு பிழிந்த சக்கைகள், பாலித்தீன் பைகள் போன்றவற்றை ஆங்காங்கே போட்டு தீயிட்டு எரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் சில்வர் பிச் விரைவில் எரி சாம்பல்கள் நிறைந்த கருப்பு நிறக் கடற்கரையாக மாறும் அபாயம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கடலூர் நகருக்கு உள்ளேயே நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், விதிகளுக்கு மாறாகக் குப்பைகளை தெருக்களிலேயே எரிக்கும் வேலைதான் செய்கிறார்கள்.  

                   அந்தக் கலாசாரம்தான் சில்வர் பீச்சுக்கும் பரவியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அவ்வப்போது சில்வர் பீச் அசுத்தம் அடையும் போதெல்லாம், ஏதேனும் தொண்டு நிறுவனங்கள்தான் முன்வந்து, சுத்தம் செய்து வருகின்றன. தற்போதும் மாசி மகத் திருவிழாவுக்குப் பின் அலங்கோலமாகக் காட்சிதரும் சில்வர் பீச், தன்னை அழகுபடுத்திக் கொள்ள, மீண்டும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறதோ?

    Read more »

    சட்டசபை தேர்தல் தொடர்பான பயிற்சி: நாளை கடலூர் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்கிறார்

                     சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

           இந்த பயிற்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.
    முதல் நாளான இன்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.

               பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கோவை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பயிற்சி அளிக்கப்படுகிறது. கடைசி நாளான சனிக்கிழமை நடத்தப்படும் பயிற்சியில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.


    Read more »

    மாற்றுத் திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

                    தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணியிடங்களில் (குரூப்-4), மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான சிறப்புத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இதற்கு, மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

                   அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 145, தட்டச்சர்கள் பணியிடங்கள் 106, சுருக்கெழுத்தர் பணியிடங்கள் 17 ஆகியவை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கான சிறப்பு போட்டித் தேர்வு, ஆகஸ்ட் 7ம் தேதி 32 மையங்களில் நடக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதி கொண்ட மாற்றுத்திறனாளிகள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மார்ச் 23ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


    Read more »

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 2ல் நாட்டியாஞ்சலி துவக்கம்

    சிதம்பரம்: 

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது. 

                 நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டிய கலையை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதற்காக அறக்கட்டளை துவக்கி 1981ம் ஆண்டு முதல் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. 

                  இந்த ஆண்டு 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலர்கள் நாகசாமி, வக்கீல் சம்பந்தம், துணைத் தலைவர் சாமிநாதன், இணைச் செயலர் சக்தி நடராஜன் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Read more »

    கடலூர் மாவட்டம் முழுவதும் கிடப்பில் போடப்பட்ட சி.எப்.எல். பல்பு திட்டம்






                   மின் சிக்கனத்தை கடைபிடிக்க தமிழகத்தில் துவங்கப்பட்ட, மானிய விலையில், சி.எப்.எல்., பல்பு வழங்கும் திட்டம், கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. வெப்பத்தை குறைக்க பல நாடுகள் மரங்களை வளர்க்கவும், மின் சாதனங்களால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. மின்சாரத்தின் மூலம் எரியும் குண்டு பல்புகளால் வெப்பம் அதிகரிப்பதோடு, மின்சார தேவையும் கூடுதலாகிறது. மின் உற்பத்தி செய்வதற்காக நாம் பயன்படுத்தும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் உண்டாகும் வெப்பம் மற்றும் கரியமில வாயுவும் ஓசோன் படலத்தை ஓட்டை விழச் செய்கிறது என்பதால், குண்டு பல்புகளை அகற்றி விட்டால் மின் சிக்கனத்துடன், புவி வெப்பமடைவதையும் ஓரளவு குறைக்கலாம்.

                     இத்திட்டத்தை, மத்திய அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டது. அதற்காக, முன் மாதிரியாக தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளுக்கு பதிலாக, சி.எப்.எல்., பல்புகளை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த பல்புகளை மின்சார வாரியம் மானிய விலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்காக, ஒவ்வொரு வீடுகளில் எத்தனை குண்டு பல்புகள் உள்ளன என்பது குறித்து மின்சார வரியம் சர்வே எடுத்து அரசுக்கு அனுப்பியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், சிதம்பரம் நகராட்சியில், சி.எப்.எல்., பல்பு மானிய விலையில் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டிய இத்திட்டம் சிதம்பரம் நகராட்சியை தவிர வேறு எங்கும் வழங்கப்படவில்லை. ஆறு மாதம் முடிந்தும் இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    Read more »

    கடலூரில் கலங்கலான குடிநீர்

    கடலூர் : 

                 கடலூரில் வினியோகிக்கப்படும் குடிநீரை தினசரி பரிசோதிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். 

                 கடலூரில் 23 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு சாலை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேணுகோபாலபுரத்தில் நடந்த ஆய்வில் பாதாள சாக்கடைத் திட்ட ஆள் நுழைவு குழிகள் பல உடைந்தும், மண்கொட்டி மூடப்பட்டிருந்தது. அதனை சுத்தம் செய்யவும், ஆள் நுழைவு குழாய்களை சாலை மட்டத்திற்கு உயர்த்தவும் உத்தரவிட்டார். 

                 பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் புதைக்கப்பட்டுள்ளதா? இத்திட்டத்திற்கு பணம் செலுத்தி விட்டீர்களா? குடிநீர் இணைப்பு உள்ளதா? தண்ணீர் தினசரி வருகிறதா என விசாரணை செய்தார். அதற்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கலங்கலாக இருப்பதால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை என்றனர். உடன் நகராட்சி அதிகாரிகள் திருவந்திபுரம் மலையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதாகவும், இரும்பு தாது சற்று அதிகமாக உள்ளதால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினர். உடன் நிர்வாக ஆணையர் தண்ணீரை தினசரி மாதிரி எடுத்து ஆய்வு செய்யவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    Read more »

    நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

    Country wise Vistior