உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

வெளிநாட்டு வேலைக்கான பதிவு செய்யும் முகாம் : 23ம் தேதி துவக்கம்

கடலூர் :

                  வெளிநாட்டு வேலைக் கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது.

                 தமிழக அரசு நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த ஊதியத்துடன் பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனம் தொடங்கிய நாள் முதல், பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலான அனுபவம் பெற்ற ஆயிரக்கணக்கான மனுதாரர்களை இந்நிறுவனம் பணியமர்த்தி வருகிறது. வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதற்கான பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை தவிர்த்து சிரமத்தை போக்கும் பொருட்டு அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த சிறப்பு முகாமினை நடத்துகிறது. வரும் 23, 24ம் தேதிகளில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மன்னார்புரம், திருச்சி.20, மற்றும், 30, 31 தேதிகளில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகமில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள், 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், பட்டப்படிப்பு படித்தவர்கள் 442 ரூபாயும், இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, கணக் காளர், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி.ஏ., கணினி பட்ட படிப்புவரை 772 ரூபாயும் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior