ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்காததால் காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேர்மன் மற்றும் ஐந்து கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். மற்ற கவுன்சிலர்கள் 11.30 மணியாகியும் வராததால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் துவங்காததைக் கண் டித்து காங்., கவுன்சிலர்கள் மனோரஞ்சிதம், வேலாயுதம், துர்காதேவி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர். அதன்பிறகு தி.மு.க., உள்ளிட்டமற்ற கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது காங்., கவுன்சிலர் வேலாயுதம், கூட்டத்தை வேறு நாளுக்கு ஒத்திவைக்க கோரினார். கூட்டம் நடத்த போதிய கவுன்சிலர்கள் இருப்பதால் ஒத்தி வைக்கமுடியாது என சேர்மன் செல்வி கூறியதை தொடர்ந்து கூட்டம் துவங்கியது.
செயல் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேரூராட்சி வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதத்தில் காங்., கவுன்சிலர் வேலாயுதம் பேரூராட்சியில் 10 ஆண்டாக பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரும் தீர்மானம் குறித்தும், கீழ ரத வீதியில் பேரூராட்சி இடத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூங்கிலை வெட்டியதை ஏன் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு சேர்மன் பதில் அளிக்கையில், இடமாற்றம் செய்வதில் துப்புரவு பணியாளர்களுக்கு விலக்கு அளித்திருப்பதாகவும், மூங்கில் வெட்டிய இடத்தில் பேரூராட்சி சார்பில் விரைவில் தேக்க மரக்கன்று நட இருப்பதாக சேர்மன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக