விருத்தாசலம் :
கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ளது கோணான்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் மேற்பார்வையில் 1720ம் ஆண்டு புனித பெரியநாயகி அன்னை ஆலயம் கட்டப்பட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜனவரி 23 ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்தாண்டிற்கான திருவிழா நாளை (14 ம் தேதி) மாலை 5 மணியளவில் புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந் தோணிசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 22ம் தேதி வரை திருப்பலி, நற்கருணை ஆராதனைகள், தேர் பவனி நடக்கிறது.
ஆடம்பர தேர்பவனி, கூட்டுதிருப்பலி 23ம் தேதி இரவு 9 மணிக்கு பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடக்கிறது.சென்னை, வேளாங்கண்ணி, நாகர்கோவில் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனைத்து மதத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்பது சிறப்பம்சமாகும். 24ம் தேதி காலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக