உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

பொங்கல்: 4 நாள்கள் மதுக்கடைகளை மூடவேண்டும்

கடலூர்: 

                     பொங்கல் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட, கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூடிவிட வேண்டும், குறிப்பிட்ட சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:  

                  கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பண்டிகைக் காலங்களில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாகக் கலவரங்கள், சாதிய மோதல்கள் ஏற்படுகின்றன. ÷பண்டிகைக் காலங்களில் இளைஞர்கள் மது அருந்திய நிலையில் உணர்ச்சி வயப்பட்டு செயல்படுவதும், இந்த வாய்ப்பை சமூக விரோத, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொண்டு சாதிய மோதல்களைத் தூண்டுவதுமே, இதற்கு அடிப்படைக் காரணம். இத்தகைய நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் பண்டிகை, திருவிழாக்கள் அமைதியான முறையில் அமைந்திட வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்பார்ப்பு. எனவே கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13,14,15,16 ஆகிய 4 நாள்களும் மதுபானக் கடைகளை மூடிவிட உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 

                     மேலும் பிரச்னை ஏற்படக் கூடிய இடங்களில் சாதிய மோதல்கள் ஏற்படா வண்ணமும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.

                       கீழ்காணும் பகுதிகளை பதற்றமானவைகளாகக் கருதி, பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்: விருத்தாசலம் ஒன்றியம் விளாங்காட்டூர், படுகளா நத்தம், தொரவளூர், பரவளூர், கோ.மங்கலம், ராஜேந்திரப்பட்டினம். கம்மாபுரம் ஒன்றியம் பலக்கொல்லை, இருளக்குறிச்சி, பழையபட்டினம், கார்மாங்குடி, தர்மநல்லூர், கார்குடல், கோ.ஆதனூர். திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள்.  நல்லூர் ஒன்றியம் நல்லூர். ÷மங்களூர் ஒன்றியம் கல்லூர், புவனகிரி ஒன்றியம் வத்தராயன் தெத்து, முகந்தெரியான் குப்பம், வடக்குத் திட்டை, சி.முட்லூர், மேலமூங்கிலடி, மஞ்சக்கொல்லை. பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு, வில்லியநல்லூர், பிச்சாவரம், சின்னக் காரைக்காடு, கீழமணக்குடி. கீரப்பாளையம் ஒன்றியம் அள்ளூர், வாழக்கொல்லை, பூலாப்பாடி, கந்தகுமாரன், கலியமலை, ஆயிப்பேட்டை, சாத்தங்குடி, வட்டத்தூர், நந்தீஸ்வரமங்கலம்.÷கடலூர் ஒன்றியம் கடலூர் முதுநகர், சோனங்குப்பம், எஸ்.புதூர். குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பெரியகண்ணாடி, ஆயிக்குப்பம், கொத்தவாச்சேரி. பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர், மருங்கூர், பேர்பெரியாங்குப்பம், வீரசிங்கன் குப்பம், வல்லம், காங்கிருப்பு, கீழ்குப்பம், மாளிகம்பட்டு, கீழிருப்பு, மேலிருப்பு, தாழம்பட்டு, கருக்கை, விசூர், வேகாக்கொல்லை, சாத்தமாம்பட்டு, நத்தம். அண்ணா கிராமம் ஒன்றியம் எனாதிமங்கலம், கரும்பூர், திருத்துறையூர், பலாப்பட்டு. ÷மேற்கண்ட பகுதிகளில் தகுந்த நடவடிக்கை எடுத்தும் போலீஸ் கண்காணிப்பை அதிகரித்தும், பொங்கல் மற்றும் அதைஒட்டிய விழாக்களை அமைதியாகவும் சமூக நல்லிணக்கத்துடனும் கொண்டாடுவதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

                          கட்சி நிர்வாகிகள் பேரறிவாளன், அசுரன், மகளிர் குழு கிறிஸ்டோபர் ராணி, தமிழ்செல்வி, தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாளர் திருமார்பன் உடன் சென்று இருந்தனர். 

                   என்.எல்.சி. அருகே மின்சார  வசதி இல்லாத 300 குடும்பங்கள்  தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கும் என்.எல்.சி. நிறுவனம் அருகே கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் நகரில் மின்சார வசதி இல்லை. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரிடம் (ஆட்சியர் பொறுப்பு) புகார் மனு அளித்தனர்.÷விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது: விருத்தாசலம் வட்டம் நெய்வேலி-2, மந்தாரகுப்பம் கென்னடி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றன. இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.  இவர்கள் அனைவரும் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், தினக்கூலித் தொழிலாளர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் உள்ளனர். தமிழக அரசால் வழங்கப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள், இலவச எரிவாயு இணைப்பு, பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே  கென்னடி நகருக்கு மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் கோரி உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior