உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

உளுந்து விதைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை : பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                         காலம் தவறிய மழையால் சம்பா சாகுபடியை தொடர்ந்து உளுந்து பயிர் விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

                  காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழையாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். ஒவ் வொறு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண் ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டு களாக போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை திறப்பு தள்ளி போய் வருகிறது. இந்த ஆண்டும் காலதாமதமாகியதால் ஜூலை மாதம் துவங்க வேண்டிய சம்பா சாகுபடி அக் டோபர் மாதம் துவங்கியது. அந்த சமயத்திலும் கடைமடை பகுதி வரை தண் ணீர் சென்று சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த சாகுபடியை தேற்றி வந்தனர்.

                        ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் ஏற்பட்ட புயல் சின்னத்தால் டிசம் பர் மாதம் தொடர் மழை பெய்தது. இதனால் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பூ விட்ட நிலையில் பாதிக் கப்பட்டன. தண்ணீர் வடிந்த நிலையில் புகையான் தாக்குதல், இளைசுருட்டு புழு தாக்குதல் என எஞ்சிய பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து அடித்து பயிரை ஓரளவு காப் பாற்றினர்.

                      விவசாயிகள் போராடி காப்பாற்றிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இப்பிரச்னை ஒருபுறம் இருக்க, உளுந்து பயிர் விதைப்பை துவக்கி இருக்க வேண்டிய நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் இதுவரை உளுந்து விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எதிர்பாராமல் கடந்த வாரம் 3 நாள் பெய்த மழையால் உளுந்து விதைப்புக்கு ஏற்றார்போல் இருந்த நிலங்களில் தண்ணீர் தேங் கியது. தண்ணீர் தேங்கிய வயல்களில் இந்தியரத்தின் உதவியோடு அறுவடை செய்யும்போது நிலத்தில் இயந்திரம் புதைந்து உளுந்து பயிர் பாதிக்கப்படும். தண்ணீர் தேங்கிய வயல்களில் உளுந்து விதைக்க முடியாது. பொங்கல் பண்டிகை முன்பாக போகியின் போதே உளுந்து விதைப்பு நடக்கும். ஆனால் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உளுந்து விதைப்பு துவங்க காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் தாழ்த்தி உளுந்து விதைப்பதால் விளைச்சல் பாதிக் கும் நிலை உள்ளது. பெரும் சிரமத்திற்கிடையே சம்பா பயிரைக் காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது மழை பெய்துள் ளதால் அறுவடையும் பாதிக்கப்படுவதுடன் அடுத்து உளுந்து பயிரும் விதைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

விதை உளுந்து கையிருப்பு இல்லை:

                  கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உளுந்து விதைத்து அறுவடையின் போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் உளுந்து பயிர் பாதிப்பு ஏற்பட்டதுடன், விவசாயிகளிடம் விதை உளுந்து கையிருப்பு இல்லாமல் தீர்ந்தது. இந்த முறை விதை உளுந்து எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்ற நிலையில் தனியாரிடம் வாங்கி வைத்திருந்த நிலையில் விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior