உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

எடைப்பணி தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுமா?

கடலூர் :

                    காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                  தமிழகத்தில் 224 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை எடைபோடுதல், சாக்கு மாற்றுதல், விற்பனையான பொருட்களை வியாபாரிகளுக்கு லாரியில் ஏற்றி அனுப்புதல் போன்ற பணிகளை எடைப்பணி தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஒழுங்குமுறை விற் பனை கூடத்திலும் 10 முதல் 20 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.

               இவர்களுக்கு விற்பனைக்கூடம் சார்பில் ஒரு மூட்டைஒன்றுக்கு 3 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் விற்பனை பொருட்களுக்கு சீட்டு போட 31 பைசாவும், மூட்டையில் இருந்து சிதறும் தானியங்களை சுத்தம் செய்யும் சித்துக்கு 10 பைசாவும் போக மீதியுள்ள தொகையை எடை தொழிலாளர்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண் டும். அதேப்போல விற்பனையான மூட்டைகளை வியாபாரிகளுக்கு அனுப்புவதற்காக மூட்டை ஒன் றுக்கு 3.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

                   நாளொன்றுக்கு 200 மூட்டை விற்பனைக்காக வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஓரளவு தொழிலாளர்களுக்கு கூலி கிடைக் கும். வரத்து குறைவாக இருந்தாலும், விடுமுறை, சீசன் இல்லாத காலங்களில் அவ்வளவு விளைபொருட்கள் விற்பனைக்கு வராது. எனவே தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நிரந்தர வருமானம் கிடைப்பதில்லை. இந்த தொழிலையே நம்பியுள்ள எடைத்தொழிலாளர்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது. எனவே பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், வாரிசுக்கு பணி, விபத்து காப்பீடு, வருங் கால வைப்பு நிதி, வேளாண்துறை காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என எடைப்பணி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. அனைத்து துறை ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் முதல்வர் எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என் கின்றனர் ஒழுங்குமுறை விற்பனை கூட எடைத்தொழிலாளர்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior