சிதம்பரம் :
சிதம்பரம் நகராட்சி பகுதியில் ஏழைகளுக்கு பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நேற்று வரை கிடைக்காததால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் புத்தாடை உடுத்தி மகிகழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே வேட்டி, சேலை வழங்க வேண்டும் என்பதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதியிலும் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விதிவிலக்காக சிதம்பரம் நகர பகுதியில் நேற்று வரை வேட்டி, சேலை வழங்கவில்லை.சிதம்பரம் நகர பகுதிக்கு மிக குறைந்த அளவே வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்டி, சேலையை வழங்கினால் பலருக்கு கிடைக்கவில்லை என பிரச்னை ஏற்படும் என ரேஷன்கடை ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
இதுவரை வேட்டி, சேலை கிடைக்காததால் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு ரேஷன் கார்டுடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். ரேஷன் கடைகளும் நாளை முதல் விடுமுறை விடப்படும் என்பதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வேட்டி, சேலை கிடைக்குமா... கிடைக்காதா.. என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக