கடலூர்:
கடலூர் மாவட்டப் போலீஸôர் கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மாசானமுத்து உத்தரவிட்டு இருக்கிறார்.
எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸôரும் கடந்த இரு நாள்களாக, மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார்கள்.÷பணியில் இருக்கும் போலீஸôர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடலூர் மாட்டத்தில் கடந்த ஆண்டு, பணியில் இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு காவலர் இதய நோயால் இறந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் ஆய்வாளர் ஒருவர் கடலூர் சிறையில் இருந்த கைதி ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்து இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டால் வியாதியை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் 15-ம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனை செய்து, மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. மாசானமுத்து உத்தரவிட்டு உள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டப் போலீஸôர் அனைவரும் கடந்த இருநாள்களாக மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
பெரும்பாலானோர் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மாவட்டக் காவல்துறை தலைமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அலுவல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் ரகசியக் குறிப்பேடுகளுடன், மருத்துவப் பதிவேடுகளும் பராமரிப்பட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பரிசோதனையில் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், போலீஸôர், உரிய மருத்துவத் திட்டங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக