கிள்ளை :
நவரை சாகுபடிக்கு போதிய தண்ணீரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் கிழக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் காவிரி கடைமடையை ஒட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வவசாயம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட் டங்களான திருச்சி, தஞ்சை, நாகை மாவட் டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீர் கல் லணை, அணைக்கரை, கீழணை வழியாக தெற்கு ராஜன், வடக்குராஜன் வாய்க்கால்கள், குமுக்கியாறு, மண்ணியாறு மற் றும் வடவாறு மூலம் வரும் தண்ணீரை சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.மேட்டூரில் திறக்கப்படும் 10 ஆயிரத்து 160 கன அடி தண்ணீரில்1016 கன அடி தண்ணீரை காவிரி டெல்டாவின் கடைமடைபகுதியான கடலூர் மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் 441 கன அடி தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது. இதில் 75 கனஅடி தண்ணீர் சென்னை கூட்டு குடிநீர்திட்டத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள 341 கன அடி தண்ணீர் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 37 கன அடி தண்ணீர் வடவாற்றிலும், 25 கன அடி குமுக்கியாறு மற்றும் மண்ணியாற்றிலும், 43 கன அடி வடக்கு ராஜன் வாய்க் காலிலும்,41 கன அடி தெற்கு ராஜன் வாய்க்காலிலும் திறந்து விடப்படுகிறது.
இப்பகுதிக்கு வரும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்கால் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 344 ஏக்கரில் விவசாயம் செய் கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் போர்வெல் அமைத்தோ, கிணற்று பாசனத்தின் மூலமும் விவசாயம் செய்ய முடியாத நிலையால், காவிரி தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளனர். இப்பகுதியில் விவசாயிகள், மேட்டுப்பகுதியில் "தை' மாதத்தில் அறுவடைக்கும், பள்ளத்தில் இருப்பவர்கள் "சித்திரை' (நவரை) பட்டத்திற்கும் (தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்ட காலம் முதல்) தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் அடுத்த கிள்ளை, நஞ்சைமகத்துவாழ்க்கை, பொன்னந்திட்டு, சிங்காரக்குப்பம், மானம்பாடி, தைக்கால், குச்சிப்பாளையம், வடக்குச்சாவடி உள் ளிட்ட கடற்கரை பகுதி விவசாயிகள் நவரை சாகுபடியை நம்பியுள்ளனர். தற்போது விதைகால் (நிலத்தில் விதை தூவுதல்) விட்டுள்ள நிலையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், தொடர்ந்து தண்ணீர் வருமா என்ற அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இப்பகுதி விவசாயிகள் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கியும், கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்காமலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே, மாவட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட பத்து சதவீத தண்ணீர் முழுமையாக கிடைக்கவும், தற் போது நவரை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், முத்தையா நகரில் இருந்து காரைக்காட்டுச்சாவடி வரை கான்சாகிப் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக