கடலூர் :
கம்மியம்பேட்டை புறவழிச்சாலையில் தார் சாலை போட நிதி ஒதுக்கீடு செய்யாததால் மேம் பாலம் கட்டப்பட்டும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் நகரத்தில் பெருகி வரும் நெரிசலை குறைக்க மாற்று பாதையாக அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடி அண்ணா மேம்பாலம் அருகில் இருந்து கம்மியம் பேட்டை வரை கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி பொதுப்பணித்துறையினரால் 40 லட்சம் செலவில் புறவழிச்சாலை அமைக்கப்பட் டது. கெடிலம் ஆற்றுப்படுகையாக இருப்பதால் வெள்ளக்காலங்களில் அரிப்பு ஏற்படும் என்பதால் நெடுஞ்சாலைத் துறையினரால் 5 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டது. பணிகளை முடித்து பொதுப்பணித்துறையில் ஒப்படைத்ததோடு சரி.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலையில் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலைக்கென நிதி ஒதுக்கீடு செய்யாததால் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் கைவிட்டுவிட்டன. தற்போது எந்த துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே புரியவில்லை. இரு துறை அதிகாரிகளும் சேர்ந்து நகராட் சியை கைகாட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே பாதாள சாக் கடைத்திட்டத்தில் தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க போதுமான நிதி இல்லாமல் தள்ளாடும் நகராட்சி புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கடலூர் நகர மக்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மேம்பாலம், புறவழிச்சாலையை கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் உள்ளனர். கடலூர் நகர வாசிகள் மீது அக்கறை கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சாலைபோட நிதி பெற்றுத் தர முன்வருவார்களா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக