சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் மாணவரை காப்பாற்றி இருக்க முடியும். இச்சம்பவம் குறித்து முறையிட சென்ற மாணவர்களை துணைவேந்தர் சந்தித்து பேசியிருந்தால் மூன்று மாணவர்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை ஏவி மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் சில மாணவர்கள் அங்குள்ள ஓடையில் விழுந்துள்ளனர். மூன்று மாணவர்கள் இறந்துள்ள னர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் போலீஸ் துறையின் இச்செயலை மா. கம்யூ., தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே மாணவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக