உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

'கேந்தி' மலர் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம்


கடலூர் : 

               விலை வீழ்ச்சி காரணமாக மலர் (கேந்தி) சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

                 கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி தவிர ஏனைய பகுதிகளில் புஞ்சையில் மணிலா, காய்கறி பயிர் பிரதானமாக செய்து வந்தனர். கிராமப்பு புற வேலை வாய்ப்பு திட்டம் துவங்கிய பின்னர் விவசாயக் கூலியாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்படியே வந்தாலும் அதிக கூலி, குறைந்த வேலை நேரத்தால் விவசாயிகளால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கூலியாட்கள் தேவைப்படாத சவுக்கு, தென்னை, எண்ணெய் பனை போன்ற பயிர்களை பயிரிட துவங்கினர். தற்போது பண்ருட்டி பகுதியில் முட்டை கோஸ், நூக்கல் போன்ற மலைக்காய்கறிகள் பயிரிடுகின்றனர். அதேப்போல் ஓசூரில் பயிரிடப்படும் "ஹைபிரிட்' வகை (கேந்தி) பூக்கள் கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.
                     உரம், தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இந்த வகை மலர்கள் நல்ல விலை போவதாக கருதி கடலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் (கேந்தி) மலர்கள் சாகுபடி செய்யப்பட்டன. சாதாரணமாக கிலோ 25 ரூபாய் முதல் 40 வரை விலை போகும் இந்த மலர் தற்போது வெறும் 5 முதல் 10 ரூபாய்க்கு விலை போகிறது. செடிகளில் இருந்து பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வர குறைந்த பட்சம் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் செலவாகும். உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு விற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

                       மாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றாலும் மாசி மகத்தையொட்டி 2 வாரங்களில் கோவில் திருவிழாவிற்கு மலர் விற்பனை சூடு பிடிக்கும் என விவசாயிகள் காத்திருந்து திருவிழாவுக்கென பூக்களை அறுவடை செய்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாசி மகத்திற்கு பூக்கள் விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இதே போல ஓசூரில் இருந்து கேந்தி (மஞ்சள், சிவப்பு) உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் மார்க்கெட்டில் குவிவதால் கடலூரில் விளைவிக்கப்படும் பூக்கள் வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior