விருத்தாசலம் :
போலீஸ் துறை கையாண்ட நிலம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட புகார்களில் முடிக்கப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரப்பட்டியலை எஸ்.பி., தரவேண்டும் என ஊழல் எதிர்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது .ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் வள்ளுவன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் பழனிவேல் முன்னிலை வகித் தார். செயலாளர் கலிவரதன் வரவேற்றார்.
கூட்டத்தில் போலீஸ் துறை நிலம் மற் றும் பணம் சம்பந்தப்பட்ட புகார்களை கையாளும் போது கடைபிடிக்க வேண் டிய நடைமுறைகளை அரசாணை எண் 1580ல் தெளிவுபடுத்தியுள்ளது. 2 4.11.2008 முதல் 14.02.2010 வரை மாவட் டத்தில் எத்தனை வழக்குகளில் 14 அம்ச கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விபரத்தை பட்டியலிட்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு எஸ்.பி., தரவேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆவண வரைவு கட்டண விபரப் பட்டியல் வைக்க வேண்டும். பத்திர எழுத்தர்களின் பெயர் மற்றும் பதிவு எண்களை பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் அழியாத மையினால் எழுதப்பட்ட விளம்பர பலகை வைப்பதுடன், அவர்கள் பெரும் எழுத்து கூலிக்கு ரசீது கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் அப்பாஜி, நிர்வாகிகள் சேதுமாதவன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக